ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் முன்பை காட்டிலும் ஆற்றல்மிக்கவைகளாக கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனத்தால் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலும் ஒன்றாகும். இருப்பினும் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்ட போதிலும், இந்த ஸ்போர்ட்ஸ் வெர்சன் கார் இன்னும் அறிமுகமாகவில்லை.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

இது வழக்கமான எக்ஸ்யூவி300 சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டாக கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்பக்க தோற்றத்தில், எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் சுற்றிலும் ஃபான்ஸியான பாடி டிகால்களையும், சிவப்பு நிற ஹைலைட்களை பெற்றுவரவுள்ளது. இத்தகைய தோற்றத்துடன் மிகவும் ஆற்றல்மிக்க என்ஜினை இந்த காரில் எதிர்பார்க்கிறோம்.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

இந்த வகையில் எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரில் புதிய 1.2 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஸ்டாலியோன் குடும்பத்தை சேர்ந்த இந்த டர்போ-பெட்ரோல் என்ஜினும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் தான் அறிமுகமானது. மஹிந்திரா க்ரூப்பின் எம்ஸ்டாலியோன் டர்போ-பெட்ரோல் என்ஜின்கள் வரிசையில் 1.2 லிட்டர் யூனிட், 1.5 லிட்டர் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் யூனிட் என்பவை அடங்குகின்றன.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

இதில் 2.0 லிட்டர் யூனிட் தான் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தாரிலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 காரிலும் வழங்கப்படுகின்றன. இதில் 1.2 லிட்டர் யூனிட்டை இந்த புதிய ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் உடன் எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் அத்தனை வேரியண்ட்களுக்கும் வழங்க மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

தற்சமயம் மஹிந்திரா நிறுவனம் டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 (O) என்ற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை நான்கிலும் தான் 1.2 லிட்டர் எம்.ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் என்ஜின் நிலையான தேர்வாக புதியதாக வழங்கப்பட உள்ளதாக கூறுகிறோம்.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 130 பிஎஸ் மற்றும் 230 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இத்தகைய என்ஜினை பெறுவதன் மூலம் பிரிவிலேயே ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக எக்ஸ்யூவி300 மாறவுள்ளது. இந்த டர்போ என்ஜின் உடன் ஆரம்பத்தில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு எதிர்காலத்தில் வழங்கப்படலாம். எக்ஸ்யூவி300-இன் தற்போதைய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அறிமுகம் எப்போது இருக்கும் தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

ஏற்கனவே கூறியதுபோல், இந்த எம்ஸ்டாலியோன் என்ஜினை பெறுவதன் மூலம் டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட போட்டி மாடல்கள் அனைத்தை காட்டிலும் ஆற்றல்மிக்க மாடலாக மஹிந்திராவின் இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடல் விளங்கவுள்ளது. புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்பட்ட பிறகு, தற்போதைய பெட்ரோல் என்ஜின் தேர்வும் தொடரப்படுமா என்பது தெரியவில்லை.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

அதிகளவில் விற்பனையாகக்கூடிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்யூவி300-இல் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடியதாக 7-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இணைப்பு கார் தொழிற்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு கார்னரிங் கண்ட்ரோல், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 7 காற்றுப்பைகள் போன்ற தொழிற்நுட்பங்கள் கொடுக்கப்படுகின்றன. எக்ஸ்யூவி300 காரில் மேற்கூறப்பட்ட பெட்ரோல் என்ஜின் உடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக கொண்டுவரப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! நெக்ஸானை பின்னுக்கு தள்ளவுள்ளது

இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 117 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வழங்குவதாக உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி மாடல் என்ஜின் அப்கிரேட்களுடன், கூடுதல் வசதிகளையும் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக இன்னும் சில மாதங்களில் பெறவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 To Get More Powerful 1.2-litre mStallion Turbo-Petrol Engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X