2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விரிவான தகவலைக் கீழே காணலாம்.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 புதுமுக காருக்கான புக்கிங் பணிகளை நேற்றைய (அக்டோபர் 7) தினம் காலை இந்தியாவில் தொடங்கியது. இப்பணிகள் தொடங்கப்பட்ட வெறும் 57 நிமிடங்களிலேயே 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன்பதிவுகள் கிடைத்தன.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

வாடிக்கையாளர்கள் முந்தியடித்துக் கொண்டு செம்ம ரெஸ்பான்ஸை வழங்கியதனால் நேற்றைய தினத்தின் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட புக்கிங் பணிகள் மீண்டும் இன்று தொடங்கப்பட்டது.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

இந்த முறையும் புக்கிங் தொடங்கிய குறுகிய இடைவெளியிலேயே 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் நிறைவுற்றிருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 2 மணி நேரங்கள் 8 நிமிடத்திற்கு உள்ளாகவே 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய அமோக வரவேற்பினால் மஹிந்திரா நிறுவனம் தற்போது குஷியில் திகைத்திருக்கின்றது.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

நேற்றைய தினம், முதல் 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்த பின்னர் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் விலையை உயர்த்தியது. அனைத்து தேர்வுகளின் விலையிலும் ரூ. 50 ஆயிரம் வரை விலையை உயர்த்தியது. முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு பின்னர் விலை உயர்த்தப்படும் என நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

இந்த அறிவிப்பின்படியே எக்ஸ்யூவி700 காரின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. ஆகையால், விற்பனைக்கு வந்த முதல் நாளே விலை உயர்வைப் பெற்ற முதல் கார் என்ற பெருமைக்குரிய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாறியது. அதேவேலையில், விலை உயர்வைப் பெற்றாலும் இந்தியர்கள் மத்தியில் தற்போது வரவேற்பு குறையாத காராகவும் அது மாறியிருக்கின்றது. இதற்கு இரண்டாவது நாளான இன்றைய புக்கிங் நிலவரும் உதாரணமாக உள்ளது.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 12.49 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. முன்னதாக ரூ. 11.99 லட்சமாக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. முதல் 25 ஆயிரம் யூனிட் எக்ஸ்யூவி700 விற்பனையானதை அடுத்து தற்போது அனைத்து வேரியண்டுகளும் இதுபோன்று ரூ. 50 ஆயிரம் விலை உயர்வுடன் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

தற்போது ஒட்டுமொத்தமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 50 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்துள்ளன. இது 9,500 கோடி ரூபாய் மதிப்புள்ள புக்கிங் ஆகும். எக்ஸ்-ஷோரூம் விலையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அமோக வரவேற்பிற்கு எக்ஸ்யூவி700 கார் உருவாகியிருக்கும் விதமும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

ஆம், இக்காரை மஹிந்திரா நிறுவனம் உலக தரம் வாய்ந்த கார்களுக்கு இணையாக உருவாக்கியுள்ளது. விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு இணையான வசதி மற்றும் தொழில்நுட்பங்களை இக்காரில் நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. இன்டலிஜென்ட் காக்பிட், ஸ்கைரூஃப் வசதி, ஸ்மார்ட் டூர் ஹேண்டில்கள், டைமண்ட் கட் அலாய் வீல், துள்ளியமான பார்வை திறனை வழங்கக் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், குரோம் க்ரில் என எக்கசக்க அம்சங்கள் எக்ஸ்யூவி700 காரில் இடம் பெற்றிருக்கின்றன.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

மேலும், அடாஸ் (Advanced Driver Assistance System), அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், இபிடி, இஎஸ்பி, டிசி, ஏபிஎஸ், ஏழு ஏர் பேக்குகள், ஹைபீம் அசிஸ்ட், இரட்டை-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பன்முக டிரைவிங் மோட்கள் என உள்ளிட்ட மிக தரமான அம்சங்கள் எக்ஸ்யூவி700-இல் இடம் பெற்றிருக்கின்றன.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

தொடர்ந்து, முழு வண்ண டிஜிட்டல் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளை எக்ஸ்யூவி700 தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே தற்போது இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது.

2 நாளில் 9,500 கோடி ரூபா மதிப்புள்ள புக்கிங்... நம்ப முடியாத ரெஸ்பான்ஸில் XUV700! விலையை அதிகரித்த பின்னரும் முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனக்குக் கிடைக்கும். 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினிலும், 2.2 லிட்டர், 4 சிலிண்டர் எம்ஹாவ்க் ஆயில் பர்னர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் அது கிடைக்கும். இதில் டீசல் எஞ்ஜினை மூன்று விதமான ட்யூன்-அப்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv700 gets overwhelming response bookings crosses 50000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X