கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு இமாலய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எக்ஸ்யூவி700 காருக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

65 ஆயிரம் முன்பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எக்ஸ்யூவி700 காருக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கிடைக்கும்.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

இதில், பெட்ரோல் வேரியண்ட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் அக்டோபர் 30ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது. அதே சமயம் டீசல் வேரியண்ட்களின் டெலிவரி பணிகள் வரும் நவம்பர் கடைசி வாரத்தில் இருந்து தொடங்கப்படும். டெலிவரி பணிகள் தொடங்குவதற்காக தற்போது வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

முன்னதாக கடந்த அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், ஒவ்வொரு நாளும் தலா 25 ஆயிரம் முன்பதிவுகளை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்த 50 ஆயிரம் முன்பதிவுகளும் வெறும் மூன்று மணி நேரத்திற்கு உள்ளாக கிடைத்தன. இது மிகப்பெரிய சாதனை என்பதில் துளியும் சந்தேகமில்லை.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

தற்போது முன்பதிவுகளின் எண்ணிக்கை 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவுகள் தற்போதும் திறக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம். அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப்கள் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும்.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

மேலும் புதிய எக்ஸ்யூவி700 காருக்கு மஹிந்திரா நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த காருக்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்திருப்பதற்கு இவைதான் மிக முக்கியமான காரணங்கள். முன்பதிவுகள் அதிக எண்ணிக்கையில் குவிந்து வருவதால், காரை டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படலாம்.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

ஆனால் கூடுமான வரை வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு புதிய எக்ஸ்யூவி700 காரை டெலிவரி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் முயற்சி செய்யும் என உறுதியாக நம்பலாம். முன்னதாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கும், இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

ஆனால் செமி கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே இந்த புதிய எஸ்யூவி காரை டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அத்தகைய நிலைமை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

மஹிந்திரா நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

ஆனால் செமி கண்டக்டர் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதாலும், புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்து வருவதாலும், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார்களின் அறிமுகங்கள் சற்றே தள்ளி போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கற்பனைக்கு எட்டாத வகையில் குவியும் முன்பதிவு... போட்டியாளர்களை மிரட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!

ஆனால் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு கார்களின் அறிமுகம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் இந்த இரண்டு கார்களும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mahindra xuv700 registers 65000 bookings check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X