சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

24 மணி நேர ஸ்பீடு எண்டூரன்ஸ் சேலஞ்ச் (24 hours Speed Endurance Challenge) போட்டியில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது. சென்னைக்கு அருகே உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ப்ரூவிங் டிராக்கில் (Mahindra SUV Proving Track - MSPT) இந்த சவால் நிகழ்வு அரங்கேறியது.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த நிகழ்வில், 4 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் பங்கேற்றன. அவை ஒவ்வொன்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களை கடந்தன. இதற்கு முன்பு சாதனையாக இருந்தது வெறும் 3,161 கிலோ மீட்டர்கள் மட்டுமே. கடந்த 2016ம் ஆண்டு படைக்கப்பட்டிருந்த இந்த சாதனையை, சுமார் 5 ஆண்டுகளுக்கு பின், மஹிந்திரா எக்ஸ்யூவி700 தற்போது தகர்த்துள்ளது.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த 4 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களில், டீசல் மேனுவல் வேரியண்ட்தான் முதலிடத்தை பிடித்தது. இந்த வேரியண்ட், 4,384.73 கிலோ மீட்டர்கள் பயணித்தது. அதே நேரத்தில் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 4,256.12 கிலோ மீட்டர்களும், பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் 4,232.01 கிலோ மீட்டர்களும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 4,155.65 கிலோ மீட்டர்களும் பயணித்தன.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த சவாலின்போது, தேசிய சாதனை தவிர, கூடுதலாக 80 சாதனைகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 தகர்த்தது. இந்த சவாலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் சராசரியாக மணிக்கு 170-180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் இயக்கப்பட்டன. மிக கடுமையான விதிமுறைகள் உடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போட்டியில் ஈடுபடுத்தப்பட்டது.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இதனை இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப்களின் கூட்டமைப்பு கண்காணித்தது. இந்த சாதனைகள் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ஆல் சரிபார்க்கப்பட்டது. டிரைவர்களை மாற்றவும், எரிபொருள் நிரப்பவும் மிக குறுகிய நேரமே கார்கள் நிறுத்தப்பட்டன. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு இது மிக கடுமையான போட்டியாக அமைந்தது.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்தியாவின் புகழ் பெற்ற ஆட்டோமொபைல் ஆர்வலர்களால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் இயக்கப்பட்டன. இந்த சவாலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் தன்னை நிரூபித்து காட்டியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் டிசைன் அருமையாக இருப்பதுடன், சக்தி வாய்ந்த இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றுள்ளது. அத்துடன் எக்ஸ்யூவி700 காருக்கு மஹிந்திரா நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

சூப்பர்... நம்ப முடியாத சம்பவத்தை செய்த Mahindra XUV700 கார்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த புத்தம் புதிய காருக்கு வெறும் 3 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு காருக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் முன்பதிவுகள் கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றுள்ள வரவேற்பிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

Most Read Articles

English summary
Mahindra xuv700 suv sets new national record check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X