210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

மஹிந்திரா நிறுவனம் விரைவில் உற்பத்தி செய்ய இருக்கும் எக்ஸ்யூவி 900 காரில் 210 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

மஹிந்திரா நிறுவனம் புதுமுக கார் மாடல்களைக் கொண்டு இந்தியர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், எக்ஸ்யூவி700 எனும் புத்தம் புதிய கார் மாடலை இந்தியாவில் மஹிந்திரா அண்மையில் விற்பனைக்குக் களமிறக்கியது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க தொடங்கியுள்ளது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் புக்கிங் தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை எக்ஸ்யூவி700 கார் பெற்றது. இந்த நிலையில், மற்றும் ஓர் புதிய கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

மஹிந்திரா எக்ஸ்யூவி 900 கார் மாடலே அது ஆகும். இந்த காரை வரும் 2024ம் ஆண்டில் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இக்காரில் நிறுவனம் என்ன மாதிரியான எஞ்ஜினை பயன்படுத்த இருக்கிறது என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

இந்த காரில் நிறுவனம் 210 எச்பி திறனை வெளிப்படுத்தக் கூடிய டீசல் எஞ்ஜினை பயன்படுத்த இருக்கின்றது. இது ஓர் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜினில் ட்வின் ஸ்க்ரோல் டர்போசார்ஜர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிக திறன் வெளிப்பாட்டிற்கு உதவுகின்றது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700 கார் அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஸ்மார்ட் டூர் ஹேண்டில், அடாஸ் அசிஸ்டன்ட் வசதி மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் புதிய எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடனேயே எக்ஸ்யூவி900 காரும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் அதிகபட்சமாக 9 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதிகளுடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எக்ஸ்யூவி700 ஐந்து மற்றும் ஏழு இருக்கை தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

ஆகையால், புதிய எக்ஸ்யூவி900 காரிலும் பன்முக இருக்கை தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இருப்பதைப் போல சூசைட் கதவுகள் இடம்பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அண்மையில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை இதையே உறுதிப்படுத்துகின்றது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

மேலும், இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியமளிக்கக் கூடிய அம்சங்கள் எக்ஸ்யூவி900 காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. மஹிந்திரா நிறுவனம் டீசல் எஞ்ஜின் வசதியுடன் விற்பனைக்குக் கொண்டு வரும் கடைசி கார் மாடலாக இது (எக்ஸ்யூவி900) இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

காற்று மாசுபாடு, சூற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள் எரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை விரைவில் நிறுத்த இருப்பதாக அறிவித்திருக்கின்றன. இத்துடன், புதிய மாசு உமிழ் கட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், மஹிந்திராவின் கடைசி டீசல் வாகனமாக இது இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

Source: Team BHP

மஹிந்திரா நிறுவனம் கடனில் காரை வாங்குவோர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வாயிலாக கூடுதல் சிறப்பு சலுகைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. 'சுப் உத்சவ்' (Shubh Utsav) எனும் பெயரில் வாகன கடன்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த திட்டம் வரும் நவம்பர் மாதம் இறுதி வரை செயல்பாட்டில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

210 எச்பி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை பெறும் Mahindra XUV900! ஆஹா இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!

ஏழு வருடம் வரை இஎம்ஐ திட்டம், 50 சதவீதம் புராசஸிங் கட்டணம் தள்ளுபடி, 100 சதவீதம் கடன் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு 7.35 சதவீதம் வட்டி உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கடன் சலுகையானது பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமின்றி மஹிந்திராவின் வர்த்தக வாகனங்களுக்கும் பொருந்தும். ட்ரக், மினி வேன் மற்றும் டிராக்டர் ஆகிய வாகனங்களை கடன் திட்டத்தில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் 'சுப் உத்சவ்' சலுகை வழங்கப்பட இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv900 likely to get 210 bhp diesel engine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X