ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்.. இந்த வீடியோவ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்றதுக்கே அச்சப்படுவீங்க!

ஓவர்டேக் செய்ய முயன்ற மஹிந்திரா சைலோ கார் விபத்தைச் சந்திக்கும் அதிர்ச்சியான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

கொரோனா வைரஸ் பரவல் லேசாகக் கட்டுக்குள் வர தொடங்கியிருப்பதால் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. ஆகையால், வாகனங்களின் போக்குவரத்தும் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அவசர அவசரமாக சென்ற கார் ஒன்று ஓவர்டேக் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழும் விபத்து காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

தமிழகத்திலேயே இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மார்த்தாண்டம் மேம்பாலத்திலேயே இவ்விபத்து அரங்கேறியுள்ளது. தற்போது தமிழகத்தில் இன்னும் முழு ஊரடங்கு விளக்கிக் கொள்ளப்படாத நிலையே இருக்கின்றது. இருப்பினும், சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்துக்கு பஞ்சமின்றி காணப்படுகின்றது.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

அதேசமயம், மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் சாலைகள் சற்று காலியாகவே தென்படுகின்றன. இதனை, ஒரு சிலர் தங்களுக்காகவே சாலைகளை காலி பண்ணிக் கொடுத்திருப்பதாக நினைத்து அதிவேகத்தில் வாகனங்களில் பறந்து வருகின்றனர்.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

அவ்வாறு, அதிக வேகத்தில் மேம்பாலத்தைக் கடக்க முயன்ற மஹிந்திரா சைலோ காரே தற்போது விபத்தில் சிக்கியிருக்கின்றது. அக்கார் மேம்பாலத்தில் ஏறிக் கொண்டிருந்த மற்றொரு வாகனத்தை ஓவர்டேக் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

ஓவர்டேக் செய்யும்போது எதிர்புறத்தில் வேறொரு கார் வந்திருக்கின்றது. இதனை அறியாமல் ஓவர்ஸ்பீடாக வந்ததே விபத்திற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த விபத்தினால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. குறிப்பாக, காருக்குள் இருந்த அனைவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றனர்.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

ஆனால், கார் பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. காருக்கு ஏற்பட்ட சேதம் விபரம் பற்றிய தகவல் வெளிவரவில்லை. பெரிய உருவம், அதி வேக பயணம், விதிமீறல் ஆகியவையும் மஹிந்திரா சைலோ கார் விபத்தைச் சந்திக்க முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

மார்த்தாண்டம் மேம்பாலம் ஓர் குறுகிய பாதைக் கொண்ட வழித்தடம் ஆகும். ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமே வாகனங்களால் இதில் பயணிக்க முடியும். மாறாக ஒரு வாகனம் ஏறி சென்றாலும்கூட எதிரில் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.

ஓவர்டேக் செய்யபோய் தலை குப்புற கவிழ்ந்த கார்... இந்த வீடியோ பாத்தீங்க இனி ஓவர்டேக் செய்யறதையே மறந்துடுவீங்க!!

இந்த மாதிரியான சாலையிலேயே அதிகபட்ச வேகத்தில் சென்று, தற்போதும் பெரும் விபத்தைச் சைலோ கார் சந்தித்திருக்கின்றது. இந்த மாதிரியான கசப்பான சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள், தடுப்புகள் வைக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், வாகன ஓட்டிகள் சிலர் அவற்றை துளியளவும் கண்டுக் கொள்வதில்லை. இதன் விளைவாக விபத்து போன்ற கசப்பான சம்பவங்களுக்கு ஆளாகுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தற்போது அரங்கேறியிருக்கும் விபத்து நிகழ்வு அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Xylo Rolls Over After Overtaking In Marthandam flyover. Read In Tamil.
Story first published: Thursday, June 17, 2021, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X