Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூகுள் மேப் பார்த்து சென்றவர் நீரில் மூழ்கி பலி... நள்ளிரவில் அரங்கேறிய சோகம்... என்ன நடந்தது?
கூகுள் மேப் உதவியுடன் பயணித்த கார் நீரில் மூழ்கி விபத்தைச் சந்தித்தது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கூகுள் மேப்பின் உதவியுடன் சென்று ஆபத்தில் சிக்குவோரின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. மிக சமீபத்தில் ரஷ்யாவில் இளைஞர்கள் சிலர் கூகுள் மேப்பின் உதவியுடன் சென்று வழி தெரியாத இடத்தில் சிக்கினர். உதவிக்கு ஆள் வராதநிலையில் கடும் குளிரில் சிக்கி அவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் வடுவே ஆராதநிலையில் தற்போது மற்றுமொரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. யாரிடம் விசாரிக்காமல் கூகுள் மேப்பை மட்டுமே பார்த்தபடி சென்ற இளைஞர்கள் சிலர் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஒரு உயிரும் பறிபோயுள்ளது.

காரை மீட்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இச்சம்பவம் எங்கேயே நடைபெற்றது என எண்ணிவட வேண்டாம். மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இது அரங்கேறியிருக்கின்றது. நண்பர்கள் மூவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள மிக உயரமான மலையான கல்சுபாய் (Kalsubai) பகுதிக்கு டிரெக்கிங்கிற்காக சென்றிருக்கின்றனர். இடம் புதியது என்பதால் கூகுள் மேப் உதவியுடன் அவர்கள் பயணித்திருக்கின்றனர்.

இதன் மீதிருந்த அதீத நம்பிக்கையின் காரணத்தினால் வேறு யாரிடமும் அவர்கள் பாதையைப் பற்றி விசாரணை மேற்கொள்ளாமல் பயணித்திருக்கின்றனர். இந்தநிலையிலேயே முழுவதும் நீரால் மூழ்கியிருந்த பாலம் ஒன்று அவர்களின் பாதையில் குறுக்கிட்டிருக்கின்றது.

அந்த பாலம் முழுவதும் ஆற்று நீரால் மூழ்கடிக்கப்பட்ட நிலையிலேயே இருந்திருக்கின்றது. மேலும் நீரின் வேகமும் அதிகரித்து காணப்பட்டிருக்கின்றது. இதனை சற்றும் எதிர்பார்த்திராத இளைஞர்கள் வந்த வேகத்திலேயே காரை பாலத்தின் மீது இயக்கியிருக்கின்றனர். அப்போதே, நீர் வரத்து மிக அதிக வேகத்தில் இருந்ததன் காரணத்தினால் கார் ஆற்றுக்குள்ளே இழுத்துச் செல்ல நேரிட்டது.

அப்போது இருவர் மட்டும் நீச்சலடித்து கரை சேர்ந்துவிட கார் ஓட்டுநரான சதீஷ் குலே என்ற இளைஞர் மட்டும் காருக்குள்ளேயே சிக்கியிருக்கின்றார். இவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகின்றது. இதில், வெகு நேரமாக போராடியும் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம்குறித்து தகவலறிந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக காருக்குள் சிக்கியிருந்தவரை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் அவரை சடலமாகவே மீட்க முடிந்தது. இந்த விபத்து சம்பவம் நடைபெற்றபோது அதிகாலை 1.45 மணி இருக்கலாம் என தப்பிய இருவர் போலீஸாரிடத்தில் கூறியிருக்கின்றனர்.

கூகுள் மேப்பில் போதிய எச்சரிக்கை இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என கூறுகின்றனர். கடந்த சில வாரங்களே அந்த ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகக் கூறப்படுகின்றது. இதனையறியாமல் வந்ததன் காரணத்தினாலயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், டிரெக்கிங்கு வந்த இளைஞர்கள் கண்மூடித்தனமாக காரை ஓட்டி வந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என சிலர் கூறுகின்றனர்.

குறைந்த வேகத்தில் வந்திருந்தால் குறுக்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதைச் சுதாரித்திருக்க முடியும். மேலும், இந்த பெரும் விபத்தை அவர்களால் தவிர்த்திருக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். அதேசமயம், கூகுள் மேப்பைப் பார்த்து பயணித்த அதேவேலையில் உள்ளூர் வாசி ஒருவரை முன்னதாக விசாரித்து பயணித்திருக்கலாம். இவ்வாறு செய்திருந்தாலும் இந்த விபரீதத்தை அவர்களால் தவிர்த்திருக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

ஆகையால், கூகுள் மேப்பின் கோளாறு சிறியதளவு இருக்கின்ற அதேவேலையில் இளைஞர்கள் அதிக கவனத்துடன் பயணித்திருக்கலாம் என்றே பெரும்பாலானோர் கூறுகின்றனர். வாகன ஓட்டிகள் சிலர் செய்கின்ற துணிச்சலான செயலின் காரணமாக விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. மழை மற்றும் காட்டு பகுதியில் செல்லும் அதிக கவனம் தேவை என்பதையே இந்த விபத்து சம்பவம் அனைவருக்கு உணர்த்துகின்றது.
விபத்தில் சிக்கியது டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் என்பதால் உதாரணத்திற்காக ஃபார்ச்சூனர் கார்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.