இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்.. இதுக்குதான் வாத்தியாரே காத்திருந்தோம்!

மாருதி சுசுகியின் அரேனா கார் மாடல்களுக்கும் இனி அந்த சிறப்பு தொழில்நுட்ப வசதியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைத்த கார் மாடல்களில் மட்டுமே இந்த பிரத்யேக சிறப்பு வசதியை நிறுவனம் அறிவித்திருந்தது. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் சுசுகி இணைப்பு எனும் பிரத்யேக வசதியை வழங்கி வருகின்றது. 2018ம் ஆண்டில் இருந்து இந்த வசதியினை நிறுவனம் நெக்ஸா ரேஞ்ஜில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் வழங்கி வருகிறது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

இதன் வாயிலாக ஸ்மார்ட்போனை காருடன் இணைக்க முடியும். இதற்கு பிரத்யேக செயலி ஒன்றை நிறுவனம் வழங்குகின்றது. இத்தகைய வசதியினையே தனது அரேனா ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களிலும் மாருதி சுசுகி வழங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

சந்தா திட்டத்தின்கீழ் இந்த செயலியை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். சுசுகி நிறுவனம் அதன் 'சுசுகி கனெக்ட்' -இன் வாயிலாக பல்வேறு சிறப்பு சேவைகளை வழங்கி வருகின்றது. வாகனம் இருக்கும் இடத்தை லைவாக கவனிப்பது, வாகனம் பற்றிய தகவல், டிரைவிங் அனலடிக்ஸ் ரிப்போர்ட், ரோடு சைடு அசிஸ்டண்ட் மற்றும் வாகன செக்யூரிட்டி அலர்ட் உள்ளிட்ட சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்குகின்றது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

இந்த வசதியினையே தற்போது அரேனா ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களுக்கும் மாருதி சுசுகி அறிமுகம் செய்திருக்கின்றது. நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்கள் வாயிலாக இந்த சேவையை தனது பழைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. கூடுதல் அக்ஸசெரீஸ் வாயிலாக இதனை நிறுவனம் ழழங்க இருக்கின்றது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

அரேனா ஷோரூமில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 11,900 என்ற விலையில் சுசுகி கனெக்ட் சந்தா வழங்கப்படுகின்றது. நெக்ஸா வரிசையில் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களுக்கு ரூ. 2,299 மூன்று ஆண்டுகளுக்கான கட்டணமாகவும், ரூ. 999 ஓராண்டிற்கான கட்டணமாகவும் வசூலிக்கப்படுகின்றது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

அரேனா ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் இணைப்பு வசதி இல்லாதது ஓர் குறையாகவே தென்பட்டது. ஆனால், இந்த குறை இனியும் தொடராது. இதனை தீர்த்து வைக்கும் வகையில் நிறுவனம் தனது இணைப்பு வசதியை பிற கார் மாடல்களுக்கும் அறிமுகம் செய்திருக்கின்றது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

மாருதி சுசுகி நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இணைப்பு வசதியை அரேனா வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் அறிமுகம் செய்திருக்கின்றது. அதேவேலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நிறுவனம் இன்னும் பிற சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

அந்தவகையில், ஆல்டோ காருக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான சேமிப்பு பலனை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி மற்றும் வரவிருக்கும் தீபாவளி பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மாருதி ஆல்டோ மட்டுமின்றி அதன் எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன்-ஆர், ஸ்விஃப்ட், எர்டிகா, விட்டார ப்ரெஸ்ஸா, ஈகோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

நிறுவனம் தற்போது குருகிராம் மற்றும் மனோசர் தொழிற்சாலையில் வாகனங்களின் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றது. சுமார் 60 சதவீதம் வரை உற்பத்தி பணிகள் குறைக்கப்படுவதாக அண்மையில் நிறுவனம் அறிவித்தது. சிப் தட்டுப்பாடு காரணமாக இந்நிலைக்கு மாருதி சுசுகி தள்ளப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே நிறுவனம் தனது உற்பத்தி பணிகளை குறைத்திருக்கின்றது. சிப்களை விநியோகம் செய்யும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக போஸ்ச் (Bosch) இருக்கின்றது.

இனி மாருதி சுசுகியின் அரேனா மாடல்களிலும் அந்த சிறப்பு வசதி கிடைக்கும்... வாத்தியாரே இதுக்குதான் காத்திருந்தோம்!

இது மலேசியாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடி வைரஸ் பரவல் காரணமாக அண்மையில் மூடியது. இதன்விளைவாக மாருதிக்கு செய்யப்படும் சிப் விநியோகம் தடைப்பட்டது. இதுமாதிரியான சிக்கலில் மாருதி சுசுகி நிறுவனம் மட்டுமின்றி உலகின் பிற முன்னணி நிறுவனங்களும் வாகன உற்பத்தியை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் சிக்கி தவித்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை தற்காலிமாக மூடியிருக்கின்றன. இதற்கு தற்போதைய சிப் உற்பத்தி குறைந்திருப்பதே காரணமாகும்.

Most Read Articles
English summary
Maruti suzuki announced suzuki connect now available for arena models also
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X