கற்பனைகூட செய்து பார்க்க முடியல... 5.5வருஷத்தில் பிரமாண்ட விற்பனை வளர்ச்சியில் மாருதி பலினோ... தலையே சுத்துது!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பலினோ கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் பலினோ காரும் ஒன்று. இந்த காரை 2015ம் ஆண்டு அக்டோபர் மாத்திலேயே நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காராகும். இது டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைத்தது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

இந்த காரே விற்பனையில் தற்போது புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கார் விற்பனைக்கு அறிமுகான முதல் நாள் தொடங்கி தற்போது வரை சுமார் 9 லட்சம் யூனிட் வரை விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகி 5.5 ஆண்டுகளாவது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

இந்த நிலையிலேயே மாருதி பலினோ அதிகளவில் விற்பனையாகியிருப்பதாக அசர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 5.90 லட்சம் தொடங்கி ரூ. 9.10 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இத்தகைய குறைந்த விலையிலேயே அதிக பிரீமியம் வசதிகளை பலினோ வழங்குகின்றது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு தற்போது வரையிலும் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. அக்டோபர் 2015 தொடங்கி இதுவரை 8,08,303 யூனிட் பெட்ரோல் எஞ்ஜின் கார்களும், 103,866 யூனிட் டீசல் எஞ்ஜின் கார்களும் விற்பனையாகியிருக்கின்றன. மாருதி நிறுவனம் பலினோ காரை நெக்ஸா டீலர்ஷிப்புகள் வாயிலாகவே இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

இது நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்டுகளில் பலினோ கிடைத்து வருகின்றது. இந்த கார் டொயோட்டா க்ளான்ஸா, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 மற்ரும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

பலினோ, 1.2 லிட்டர் நேட்சுரல் அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின், கே செரீஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் ட்யூவல்ஜெட் பெட்ரோல் என மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் மட்டுமே தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ட்யூவல்ஜெட் எஞ்ஜினில் மட்டும் லேசான ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

இதுமட்டுமின்றி ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, டார்க் அசிஸ்ட் ஃபங்க்சன் என பல்வேறு சிறப்பு வசதிகளையும் மாருதி வழங்குகின்றது. பலினோ காரின் அதிகபட்ச மைலேஜ் திறன் 23.87 கிமீட்டராக இருக்கின்றது. அதேசமயம், இதன் குறைந்தபட்ச மைலேஜ் திறன் 19.56கிமீட்டராக உள்ளது.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

பலினோ காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள்:

மாருதி சுசுகி பலினோ காரில் பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வண்ண மயமான பன்முக தகவல்களைக் கூடிய திரை, எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, எல்இடி டெயில் மின் விளக்கு, புற ஊதா கதிர் எதிர்ப்பு கண்ணாடிகள், கவர்ச்சியான அலாய் வீல்கள், பெரிய லக்கேஜ் ரூம், தானாக மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொண்ட கண்ணாடிகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா என எக்கசக்க வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

இதுதவிர, ஸ்டார்ட்/ஸ்டாப் புஷ் பட்டன், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், சாவியில்லா ரிமோட் என்ட்ரீ, தானியங்கி ஹெட்லேம்ப், பவர் விண்டோக்கள், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய ஹெட்ரெஸ்ட்டுகள் என பல்வேறு பிரீமியம் வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

விற்பனைக்கு வந்து 5.5 வருஷமே ஆகுது... ஆனா இதன் விற்பனை வளர்ச்சியை கற்பனைகூட செய்து பார்க்க முடியல...

தொடர்ந்து, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, குரல் கட்டளை மற்றும் செல்போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் மாருதி சுசுகி பலினோவில் வழங்கப்பட்டுள்ளன.

Source: AutoCarPro

Most Read Articles

English summary
Maruti Suzuki Baleno gets 9 Lakh Sales In Just 5.5 Years. Read In Tamil.
Story first published: Wednesday, April 7, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X