ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

இந்திய- ஜப்பானிய கூட்டணி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் விற்பனை கடந்த மே மாதத்தில் ஒரேடியாக 71 சதவீதம் குறைந்திருப்பது அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த மே மாதத்தில் வெறும் 46,555 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய 2021 ஏப்ரலில் மொத்தம் 1,59,691 மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

இந்த வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் சுமார் 71 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. மாருதியின் இத்தகைய வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க கொரோனா வைரஸ் பரவலும், அதனால் அரசாங்கங்கள் கொண்டுவந்துள்ள ஊரடங்குகளே காரணமாகும்.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

ஏனெனில் கடந்த மே மாதத்தில், 1ஆம் தேதியில் 16ஆம் தேதி வரையில், கிட்டத்தட்ட பாதி மாதத்திற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தனது தொழிற்சாலைகளை மருத்துவ ஆக்ஸிஜனை தயாரிக்க பயன்படுத்தியது.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

மொத்த விற்பனையில் இந்தியாவில் விற்கப்பட்ட மாருதி கார்களை கணக்கில் எடுத்து பார்த்தால், 35,293 யூனிட்கள் ஆகும். 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விற்பனையும் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 1,42,454 மாருதி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

மாருதியின் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என்ற மினி கார்கள் 4,760 யூனிட்கள் கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் ஏப்ரலில் இவை இரண்டு மட்டுமே 25 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் இவற்றின் விற்பனை 81 சதவீதம் குறைந்துள்ளது.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

மாருதி ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் உள்ளிட்டவை அடங்கிய காம்பெக்ட் கார் பிரிவில் இருந்து 20,343 கார்கள் கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ளன. 2021 ஏப்ரலில் இந்த பிரிவில் மட்டுமே 72,318 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

தற்போதைக்கு மாருதியின் ஒரே ஒரு நடுத்தர-அளவு செடான் காரான சியாஸ் 349 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. இந்த செடான் கார் முந்தைய ஏப்ரல் மாதத்தில் 1,567 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. மாருதி சுஸுகியின் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை கடந்த மாதத்தில் 6,355 யூனிட்கள் என்ற அளவில் நடைபெற்றுள்ளது.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

இந்த பிரிவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் மற்றும் எர்டிகா மாடல்கள் உள்ளன. அதுவே 2021 ஏப்ரலில் இவை மொத்தமாக 25,484 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன. உள்நாட்டு விற்பனையை போல் மாருதி சுஸுகியின் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியும் 35 சதவீதம் சரிந்துள்ளது.

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக பிஸியாகிய தொழிற்சாலைகள்... மாருதி சுஸுகியின் கார் விற்பனை 71% சரிவு!!

கடந்த மே மாதத்தில் 11,262 கார்களை இந்தியாவில் தயாரித்து இந்த இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரலில் 17,237 மாருதி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

Most Read Articles
English summary
Maruti Suzuki car sales May 46,555 units. Read all details in Tamil.
Story first published: Wednesday, June 2, 2021, 2:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X