எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

புத்தம் புதிய மாருதி சுஸுகி இக்னிஸ் கார் ஒன்று எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மேனுவல் டிரான்ஸ்மிஷனை தொடர்ந்துள்ள இந்த மாருதி சுஸுகி இக்னிஸ் கார் தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

நார்த்வே, இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் பெயரை நமது செய்திதளத்தில் அடிக்கடி பார்த்து வருகிறோம். ஏனெனில் நார்த்வே நிறுவனத்தால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட வாகனங்கள் பலவற்றை பற்றி இதற்குமுன் பார்த்துள்ளோம். புனேவை சேர்ந்த நார்த்வே தற்போது மீண்டும் மாடிஃபை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் ஒன்றுடன் வந்துள்ளது.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால், எலக்ட்ரிக் காராக இருப்பினும் இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தொடரப்பட்டுள்ளது. இந்த மாற்றம், இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனை செய்யும் இக்னிஸில் கொண்டுவரப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார் ஒன்றில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும்.

சரி, எவ்வாறு இது இயங்குகிறது? இதை தான் நார்த்வே நிறுவனத்தின் இயக்குனர் ஹெமங்க் தபாடே மேலுள்ள வீடியோவில் விளக்குகிறார். இருப்பினும், இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் தரம் மற்றும் மோட்டார் வெளியிடும் ஆற்றல் உள்ளிட்டவை எதுவும் வெளியிடப்படவில்லை. மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டது என்பதால், உட்புறத்தில் க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

பொதுவாக எலக்ட்ரிக் கார்களில் மேனுவலாக வேகத்தை மாற்றக்கூடிய கியர்கள் தேவைப்படாது. இதனாலேயே இத்தகைய கார்களில் வாகனத்தை நிறுத்தாமலேயே 0 ஆர்பிஎம் என்ஜின் வேகத்திற்கு சென்று வரலாம். மேலும், பயண சூழலிற்கு ஏற்ப ஏகப்பட்ட கியர் விகிதங்கள் கிடைக்கின்றன.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

உதாரணத்திற்கு, நகர்புறங்களில் ஸ்மார்ட்டான இயக்கத்திற்காக குறைந்த கியர்களில் சென்றாலே போதும். அதிக கியர் விகிதங்கள், நெடுஞ்சாலைகளில் அல்லது திறந்தவெளி பகுதிகளில் அதிக வேகத்தில் சீறிப்பாய உதவும். நாம் இந்த செய்தியில் பார்க்கும் இக்னிஸ் இவி-ஐ பொறுத்தவரையில், இதில் பேட்டரி மீளூருவாக்கம் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

இந்த அமைப்பின் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் காரில் எவ்வாறு அதிகப்பட்ச கியரில் இருந்து குறைந்தப்பட்ச கியருக்கு விரைவாக வரலாம் என்பதை மேலுள்ள வீடியோவில் ஹெமங்க் தபாடே செய்து காட்டியுள்ளார். இதனால் உடனடியாக அதிகப்பட்ச வேகத்திற்கும் செல்லலாம், அதேநேரம் குறைந்தப்பட்ச வேகத்திற்கு வரலாம். மேலும் இது பிரேக்கிங் பயன்பாட்டையும் குறைக்கிறது.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

ஒன்று அல்லது நான்கு என எந்த கியர் விகிதத்திலும் இந்த எலக்ட்ரிக் காரை ஸ்டார்ட் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த கஸ்டம் இக்னிஸ் இவி-இல் பயணத்தின் போதுதான் க்ளட்ச் லிவர் பயன்பாட்டிற்கு தேவைப்படும். எலக்ட்ரிக் கார்களில் பயணத்தின்போது விரைப்பான பயண உணர்வு ஏற்படவில்லை என்றால், கார் ஆர்வலர்களை கவர இதுதான் வழி.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

ஆனால் மேனுவல் எலக்ட்ரிக் கார்களில் டிரைவிங் மோட்களை வழங்க இயலாது. ஏனெனில் க்ளட்ச்சை பயன்படுத்துவதா, அல்லது டிரைவிங் மோட்களை பயன்படுத்துவதா என்கிற குழப்பம் ஏற்படலாம். தற்போதைய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களில் வழங்கப்படும் டிரைவிங் மோட்கள் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து வெளிவரும் ஆற்றல் அளவுகளை கட்டுப்படுத்துகின்றன.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

எலக்ட்ரிக் மோட்டாரில் எந்த தடங்கலையும் ஏற்படுத்தாமல் டிரைவிங் மோட்கள் கியர் விகிதங்களை மாற்றுகின்றன. இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் பயன்படுத்தி இருப்பது, மாருதி சுஸுகி பிராண்டின் புதிய இக்னிஸ் ஆகும். இந்த எலக்ட்ரிக் இக்னிஸ் காரில் க்ளைமேட் கண்ட்ரோல் அமைப்பு, எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங், இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்பட மற்ற அனைத்து வசதிகளும் தொடரப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கால மாற்றத்தால், பெட்ரோல் & டீசல் கார்களின் பயன்பாடு முடிவடையும் காலக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். இருப்பினும் இதற்கு இன்னும் சில வருடங்களாகும். இந்த நிலையில், கிட்டத்தட்ட 10- 15 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் பழைய பெட்ரோல் & டீசல் கார்களை மீண்டும் இயங்க இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எலக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ்!! இந்தியாவிலேயே முதல்முறையாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன்!

அதேநேரம் தங்களது எரிபொருள் என்ஜின் வாகனங்களை எல்க்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொள்ளும் வாய்ப்புகளும் தலைநகர் டெல்லியில் பரவலாக உள்ளன. புனேவில் செயல்பட்டுவரும் நார்த்வே நிறுவனம் செவ்ரோலெட் பீட், மாருதி சுஸுகி டிசைர், மாருதி சுஸுகி இக்னிஸ் போன்ற கார்களுக்கு எலக்ட்ரிக் மாற்றத்திற்கான தொகுப்புகளையும் தயாரித்து வருகிறது.

Most Read Articles
English summary
Brand-new Maruti Suzuki Ignis converted into Electric Vehicle Gets manual transmission as well [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X