சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை அட்டவணையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த மார்ச் 1ஆம் தேதி மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட தகவலின்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் மொத்தம் 1,64,469 கார்களை இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து மற்ற நாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்தும் உள்ளது.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

இந்த எண்ணிக்கை 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 11.8 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 1,47,110 கார்களையே விற்பனை செய்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

உள்நாட்டு விற்பனையை மட்டுமே கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், 1,52,983 கார்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையும் 1,36,849 மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 11.8 சதவீதம் அதிகமாகும்.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

இருப்பினும் மாருதி சுஸுகியின் மினி கார்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் குறைந்துள்ளது. மாருதியின் மினி கார்களான ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கடந்த மாதத்தில் 23,959 யூனிட்களும், அதேநேரம் 2020 பிப்ரவரி மாதத்தில் 27,499 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Rank Model Feb'21 Feb'20 Growth (%)
1 Maruti Swift 20,264 18,696 8
2 Maruti Baleno 20,070 16,585 21
3 Maruti WagonR 18,728 18,235 3
4 Maruti Alto 16,919 17,921 -6
5 Maruti Dzire 11,901 7,296 63
6 Maruti Eeco 11,891 11,227 6
7 Maruti Vitara Brezza 11,585 6,866 69
8 Maruti Ertiga 9,774 11,782 -17
9 Maruti S-presso 7,040 9,578 -26
10 Maruti Celerio 6,214 6,104 2
11 Maruti Ignis 3,340 2,912 15
12 Maruti XL6 3,020 3,886 -22
13 Maruti S-Cross 2,505 0 -
14 Maruti Ciaz 1,510 2,544 -41
15 Maruti Gypsy 0 70 -100

Source: Autopunditz

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

ஆனால் ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் உள்ளிட்ட மாடல்கள் அடங்கிய மாருதியின் நடுத்தர அளவு கார்களின் விற்பனை 15.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கார்களை கடந்த ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 69,828 யூனிட்கள் விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 80,517 யூனிட்கள் விற்றுள்ளது.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

இதற்கு கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் பெரிய அளவில் உதவிகரமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறோம். நடுத்தர அளவு செடான் பிரிவை பொறுத்தவரையில், தற்போதைக்கு இந்த பிரிவில் உள்ள ஒரே ஒரு மாடலான சியாஸ் 1,510 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

ஆனால் 2020 பிப்ரவரியில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 40.6 சதவீதம் அதிகமாக 2,544 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. மற்ற கார் மாடல்களான விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் மற்றும் எர்டிகா உள்ளிட்டவற்றை 26,884 யூனிட்கள் கடந்த பிப்ரவரியில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

சரியான நேரத்தில் 2021 ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்திய மாருதி!! மொத்த விற்பனை 11.8 சதவீதம் அதிகரிப்பு!

அதுவே, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 22,604 யூனிட்களையே இந்த நிறுவனத்தால் விற்க முடிந்திருந்தது. இந்த வகையில் இவற்றின் விற்பனையில் 18.9 சதவீத வளர்ச்சியை தயாரிப்பு நிறுவனம் கண்டுள்ளது. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி 11,486 யூனிட்களுடன் 11.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Model Wise Sales February 2021. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X