மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவன கார் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த நவம்பர் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,39,184 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், உள்நாட்டு விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 1,13,017 ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 21,393 ஆகவும், டொயோட்டா நிறுவனத்திற்கு சப்ளை செய்த கார்களின் எண்ணிக்கை 4,774 ஆகவும் உள்ளது. ஆக மொத்தத்தில் 1,39,184 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. இங்கே டொயோட்டா நிறுவனத்திற்கு மாருதி சுஸுகியின் சப்ளை குறித்து தெரிவிப்பது அவசியம்.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன என்பது பலருக்கும் தெரியும். தெரியாதவர்களுக்காக சிறிய விளக்கம். இந்த கூட்டணியின் அடிப்படையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ (டொயோட்டா க்ளான்சா) மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (டொயோட்டா அர்பன் க்ரூஸர்) ஆகிய 2 கார்களையும் டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. எனவே டொயோட்டா நிறுவனத்திற்கு மாருதி சுஸுகி சப்ளை செய்த கார்களையும் இந்த எண்ணிக்கையில் சேர்க்க வேண்டியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

இதற்கிடையே இந்தியாவின் மற்ற கார் நிறுவனங்களை போலவே, மாருதி சுஸுகி நிறுவனமும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ளதன் காரணமாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனையும் சரிவடைந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,53,223 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 1,39,184 கார்களாக குறைந்துள்ளது. இது 9.16 சதவீத வீழ்ச்சியாகும். செமிகண்டக்டக் சிப் பற்றாக்குறை பிரச்னையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய இரண்டு கார்களும் கூட்டாக 17,473 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 22,339 ஆக இருந்தது. இது 21.78 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்கள் கூட்டாக 57,019 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 76,630 ஆக இருந்தது. இது 25.59 சதவீத வீழ்ச்சியாகும். அதே நேரத்தில் சியாஸ் மிட்-சைஸ் செடான் காரின் விற்பனை எண்ணிக்கை 1,089 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,870 ஆக இருந்தது. இது 41.76 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் யுடிலிட்டி வாகனங்கள் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன. இந்த பிரிவில், எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் அடங்குகின்றன. இந்த கார்களின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 24,574 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 23,753 ஆக மட்டுமே இருந்தது. இது 3.45 சதவீத வளர்ச்சியாகும். அதே நேரத்தில் நடப்பாண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி ஈக்கோ கார் 9,571 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 11,183 ஆக இருந்தது. இது 14.41 சதவீத வீழ்ச்சியாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? கார் விற்பனை கடும் சரிவு... காரணம் என்னனு தெரியுமா?

இதுதவிர நடப்பாண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 3,291 சூப்பர் கேரி வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. இது இலகு ரக வர்த்தக வாகனம் ஆகும். தற்போது விற்பனை குறைந்திருந்தாலும், வரும் மாதங்களில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti suzuki november 2021 sales report
Story first published: Thursday, December 2, 2021, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X