கொரோனாவால் விற்பனையில் பெரும் சரிவு... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு?

கொரோனா லாக்டவுன் காரணமாக, கார் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியை பாதியாக குறைப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் அசாதரணமான நிலை காணப்படுகிறது. குறிப்பாக, சில மெட்ரோ நகரங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால், லாக்டவுன் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

இந்த சூழலில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கார் உற்பத்தி மற்றும் அதன் டீலர்களை கொரோனா பரவல் கடுமையாக பாதிக்கத் துவங்கி இருக்கிறது. இதனால், மீண்டும் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

இந்த நிலையில், கொரோனா பரவலால் பல இடங்களில் கார் விற்பனை முடங்கி உள்ளதையடுத்து, உற்பத்தியை குறைக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில்," கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்கும் வகையில், தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

கார் உற்பத்திக்காக தேவைப்படும் ஆக்சிஜனை பெறுவதற்காக, ஆலையிலேயே குறைந்த அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான எந்திரங்கள் உள்ளன. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக வழங்க உள்ளோம். இதனால், ஆலையை மே 1 முதல் 9ந் தேதி வரை தற்காலிகமாக மூடி வைக்க முடிவு செய்துள்ளோம்.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

இந்த சமயத்தில் எங்களது ஆலைகளில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பல இடங்களில் எங்களது பாதிக்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து, உற்பத்தியை பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

இந்த நிலையில், தற்போது மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் விற்பனை 35 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், அந்நிறுவனத்தின் பல்வேறு கார் மாடல்களுக்காக சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

கையில் உள்ள இருப்பை வைத்து சமாளிக்க அந்நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளது. ஏற்கனவே 32,000 கார்களை இருப்பு வைத்திருக்கும் அந்நிறுவனம் தற்போது 90,000 கார்கள் வரை இருப்பு வைக்க முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

எனினும், லாக்டவுன் கட்டுப்பாடுகள், உற்பத்தி நிறுத்தம் போன்ற பல காரணங்களால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கார்கள் குறித்த நேரத்தில் டெலிவிரி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.

கொரோனாவால் டீலர்கள் மூடல்... கார் உற்பத்தியை பாதியாக குறைக்க மாருதி முடிவு!

ற்போதைய நிலையில், அனைவரும் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளதால், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு கார் விற்பனையில் மந்த நிலையே காணப்படும் என்று தெரிகிறது. கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தால் மட்டுமே இயல்பு வர்த்தகத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki is planning to reduce production capacity by half due to COVID-19.
Story first published: Thursday, May 6, 2021, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X