எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

எஸ்-பிரெஸ்ஸோ மாடலை விளம்பரப்படுத்தும் புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவினை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, அளவில் சிறிய காம்பெக்ட் வாகனமாக சந்தைப்படுத்தப்படும் இது மைக்ரோ-எஸ்யூவி வாகனமாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 2019இல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இதன் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் விதமாகவே தற்போது புதிய தொலைக்காட்சி விளம்பர வீடியோவினை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல்முறையாக கார் வாங்கும் இளம் வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்து அறிமுகம் செய்யப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோவின் தற்போதைய டிவிசி வீடியோவும் இளைஞர்களை கவரும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரையில் 75,000க்கும் அதிகமான எஸ்-பிரெஸ்ஸோ கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்து வருகிறது. எஸ்-பிரெஸ்ஸோ மைக்ரோ எஸ்யூவி காரை ஆல்டோவிற்கு இணையானதாக மாருதி சுஸுகி நிறுவனம் நிலைநிறுத்தி வருகிறது.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

ஆனால் விற்பனையை பொறுத்தவரையில் ஆல்டோவிற்கு இணையானதாக எஸ்-பிரெஸ்ஸோ இல்லை. 2 வருடங்களாக விற்பனையில் இருக்கும் போதிலும், 75,000 யூனிட்கள் விற்பனை என்பது உண்மையில் குறைவே. ஆல்டோ ஹேட்ச்பேக் அளவிற்கு எஸ்-பிரெஸ்ஸோ வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

முன்பக்கத்தில் உயரமாக பொனெட் உடன் எஸ்யூவிக்கு உண்டான டிஎன்ஏ-வை எஸ்-பிரெஸ்ஸோ கொண்டுள்ளது. அத்துடன் எஸ்-பிரெஸ்ஸோவின் முன்பக்கத்தில் அளவில் பெரிய ஹெட்லேம்ப்கள், ஜோடி எல்இடி டிஆர்எல்களுடன் வழங்கப்படுகின்றன. வெளிப்பக்கம் மட்டுமின்றி, எஸ்-பிரெஸ்ஸோவின் உட்புறமும் இளைஞர்களை கவரும் வகையில் வெளிப்பக்க உடல் நிற ஹைலைட்களுடன் வழங்கப்படுகிறது.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

எஸ்-பிரெஸ்ஸோவின் டேஸ்போர்டின் மைய பகுதியில் பெரிய அளவில், வட்ட வடிவில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படுகிறது. பின் வரிசை இருக்கையில் இருந்து பார்த்தால் இத்தகைய டேஸ்போர்டு பெரிய அளவிலான கை கடிகாரம் போன்று காட்சியளிக்கும்.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இதன் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் சில கண்ட்ரோல் பொத்தான்களும் கொடுக்கப்படுகின்றன. மற்ற கார்களை போன்று எஸ்-பிரெஸ்ஸோவையும் மாருதி சுஸுகி நிறுவனம் ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்கிறது.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த வகையில் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. எஸ்-பிரெஸ்ஸோ ஏறக்குறைய 21.7கிமீ மைலேஜ்ஜை வழங்குவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இவ்வாறு விற்பனையில் உள்ள கார்களை விளம்பரப்படுத்துவதற்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி சமீபத்தில் தான் புதிய செலிரியோ காரினை சந்தையில் அறிமுகப்படுத்தியது. புதிய தலைமுறை செலிரியோ இந்தியாவின் அதிக மைலேஜ் வழங்கக்கூடிய காராக கொண்டுவரப்பட்டுள்ளது.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

2019இல் எஸ்-பிரெஸ்ஸோ அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு சுமார் 2 வருடங்கள் கழித்து முற்றிலும் புதிய மாருதி சுஸுகி காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செலிரியோவுடன் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி கொள்ள போவதில்லை. அடுத்த 2022ஆம் ஆண்டில் இருந்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஏகப்பட்ட மாடல்களை தயார் நிலையில் இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனம் வைத்துள்ளது.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த வகையில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட், முற்றிலும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா, முற்றிலும் புதிய ஆல்டோ, பலேனோ சார்ந்த எஸ்யூவி, புதிய எஸ்-கிராஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவ மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எஸ்-பிரெஸ்ஸோவை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் மாருதி சுஸுகி!! புதிய டிவிசி வீடியோ வெளியீடு!

ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தொழிற்சாலைக்கு அம்மாநில அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கான ஒப்புதலை ஹரியானா மாநில முதலமைச்சர் மனோஹர் லால் கத்தர் கடந்த நவ.13ஆம் தேதி வழங்கி இருக்கின்றார். மாருதியின் மூன்றாவது இந்திய தொழிற்சாலை இந்த மாநிலத்தில் சோனிபாத் என்கிற மாவட்டத்தில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki S-Presso gets a new TVC.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X