2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

2021 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்டியர் பண்பை விளக்கும் புதிய டிவிசி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை மிக சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.73 லட்சத்தில் இருந்து ரூ.8.41 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

இந்த விலைகள் முந்தைய ஃபேஸ்லிஃப்ட் அல்லாத ஸ்விஃப்ட்டின் விலைகளை காட்டிலும் ரூ.15,000-ல் இருந்து ரூ.24,000 வரையில் அதிகமாகும். ஹேட்ச்பேக் பிரிவில் அரசனாக விளங்கும் ஸ்விஃப்ட் புதிய அப்கிரேட்களாக இரு-நிற பெயிண்ட்டை புதிய வசதிகள் மற்றும் கே-சீரிஸ் ட்யுல் ஜெட் ட்யுல் விவிடி என்ஜின் உடன் பெற்றுவந்துள்ளது.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

புதிய ஸ்விஃப்ட்டிற்கு முத்தின் ஆர்டிக் வெள்ளை, நள்ளிரவின் கருப்பு நிற மேற்கூரை உடன் நெருப்பின் சிவப்பு மற்றும் ஆர்டிக் வெள்ளை நிற மேற்கூரை உடன் மெட்டாலிக் நீலம் என்ற மூன்று நிறங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக காரின் முன்பக்கத்தில் கிடைமட்டமான க்ரோம் துண்டுகளுடன் புதிய முன்பக்க க்ரில் மற்றும் புதிய பம்பர் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரில் டிசைர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பலேனோ கார்களில் பொருத்தப்படும் அதே கே-சீரிஸ் ட்யுல் ஜெட் ட்யுல் விவிடி என்ஜின் வாடிக்கையாளர்களை கவர முக்கிய அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

இந்த என்ஜின் அமைப்பில் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, ட்யுல் ஜெட் தொழிற்நுட்பம் மற்றும் இண்டேக் & எக்ஸாஸ்ட் வால்வுகளுக்கு வெவ்வேறான வால்வு டைமிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

இவற்றுடன் கூல்டு எக்ஸாஸ்ட் வாயு மறுசுழற்சி சிஸ்டத்தை சிறந்த எரிபொருள் திறனிற்காக பெற்றுவந்துள்ள இந்த என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் 23.10கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் வேரியண்ட்களில் 23.76கிமீ மைலேஜ்ஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

அதேபோல் வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலும் 7 பிஎச்பி அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதே தவிர்த்து பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக உள்ள மற்ற ஹேட்ச்பேக் கார்களான ஹூண்டாய் ஐ10 நியோஸின் விலைகள் ரூ.5.19 லட்சத்தில் இருந்து ரூ.7.87 லட்சம் வரையிலும், ஃபோர்டு ஃபிகோவின் விலைகள் ரூ.5.64 லட்சத்தில் இருந்து ரூ.7.09 லட்சம் வரையிலும் உள்ளன.

Most Read Articles
English summary
2021 Maruti Suzuki Swift Sporty Character Highlighted In New TVC
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X