தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் இந்த அக்டோபர் மாதத்தில் வழக்கத்தை காட்டிலும் 40% குறைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மாருதியின் அறிவிப்பை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகிக்கு இந்தியாவில் டெல்லிக்கு அருகே மனேசர் பகுதியிலும், குஜராத்திலும் தொழிற்சாலைகள் உள்ளன. இவை இரண்டிலும் உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாகுறையால் கடந்த சில மாதங்களாக அதிகளவில் தயாரிப்பு பணிகள் நடைபெறவில்லை.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

இதனால் மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை கடந்த 2021 செப்டம்பரில் பெரிய அளவில் குறைந்துள்ளதை சமீபத்தில் தான் நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். மாருதி சுஸுகியின் இந்த நிலை கடந்த செப்டம்பர் மாதத்தோடு நின்றுவிட போவதில்லை. ஏனெனில் இந்த அக்டோபர் மாதத்திலும் தங்களது தயாரிப்பு பணிகள் வழக்கத்தை காட்டிலும் 60% குறைய வாய்ப்புள்ளதாக மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

இதேபோன்று தான் கடந்த செப்டம்பரிலும், ஆகஸ்ட்டிலும் மாருதி தொழிற்சாலையில் கார்கள் தயாரிப்பு பணிகள் வழக்கத்தை காட்டிலும் 60% குறைந்து, 40 சதவீதமாக இருந்தன. ஆனால் முன்னதாக கடந்த மாதத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த அக்டோபர் மாதத்தில் கார்கள் தயாரிப்பை வழக்கத்தை காட்டிலும் 1,60,000- 1,80,000 யூனிட்கள் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

கார் பாகம் விநியோகிப்பாளர்கள் தங்களது தயாரிப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளவுள்ளதாகவும், கடந்த சில மாதங்களாக தயாரிப்பு பணிகளில் தொய்வை இந்த 2021 அக்டோபரில் சரிக்கட்டிக்கொள்ள மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

மேலும், எலக்ட்ரானிக் பாகங்கள் அடங்கிய சிப்செட்-ஐ பல்வேறு விநியோகஸ்தரர்களிடம் இருந்து வாங்க மாருதி சுஸுகி சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது நம்மை ஆச்சிரியப்படுத்தும் விதமாக, நடப்பு அக்டோபரிலும் தங்களது கார்கள் தயாரிப்பு பணிகள் 60% குறைய உள்ளதாக மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

மாருதியின் குஜராத் தொழிற்சாலை அதன் ஜப்பானிய கூட்டணி நிறுவனமான சுஸுகியின் கீழ் செயல்படுகிறது. இருப்பினும் இந்த தொழிற்சாலையிலும் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வருகின்றன. உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான தேவையில் மாருதி சுஸுகி மட்டுமல்ல, மஹிந்திரா, ஹூண்டாய் போன்ற மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் சிக்கியுள்ளன.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

மேலும் இவை, தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள இந்த தடையினால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தினை அப்படியே வாடிக்கையாளர்களின் தலையில் அரைக்கவும் முயற்சி செய்து வருகின்றன. இந்த 2021ஆம் ஆண்டில் இந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களின் விலைகள் பலமுறை அதிகரிப்பட்டிருப்பது அதன் வெளிப்பாடாகும்.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ள தற்போதைய சூழலிலும் பெரும்பான்மையான கார் நிறுவனங்களின் விற்பனை கடந்த செப்டம்பரில் வெகுவாக குறைந்துள்ளது. குறைக்கடத்திகள் பற்றாக்குறையால் கார்கள் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறுகளினால் மாருதி சுஸுகியும் அந்த பெரும்பான்மையான நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

அதிலும் குறிப்பாக மாருதி சுஸுகியின் விற்பனை பாதிக்குமேல் சரிந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், எப்போதும் மாதத்திற்கு சராசரியாக 1.5 லட்ச கார்களை விற்பனை செய்யும் மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பரில் வெறும் 63,111 கார்களையே விற்றுள்ளது. 2020 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 57.3% குறைவு.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அடுத்ததாக அறிமுகமாக உள்ள கார்களுள் புதிய தலைமுறை செலிரியோவும் ஒன்றாகும். முற்றிலும் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள 2021 செலிரியோ இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் புதிய செலிரியோவில் தோற்றத்திலும், தொழிற்நுட்பங்களிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை மாருதி நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

தொடரும் சோதனை!! இந்த அக்டோபரிலும் 40% குறையும் மாருதி கார்கள் தயாரிப்பு!

இதன்படி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் புதிய தலைமுறை செலிரியோ முன்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் க்ரில், குமிழ் டிசைனிலான ஹெட்லேம்ப்கள் மறுவேலை செய்யப்பட்ட முன் & பின்பக்க பம்பர்களை பெற்றுவரவுள்ளது. பரிமாண அளவுகள் அதிகரிக்கப்பட உள்ளதால், காரின் உட்புறத்தில் நன்கு விசாலமான இடவசதியை எதிர்பார்க்கலாம். இவ்வாறு புதிய கார்களை களமிறக்க தயாராகினாலும், தற்போதைய கார்கள் தயாரிப்பு குறைப்பு நிச்சயம் வருகிற பண்டிகை காலத்தில் மாருதியின் விற்பனைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki's production to be 60% in this October.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X