மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா (Xtra) கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாருதி காரை பற்ற்ய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

மாருதி வேகன்ஆரின் வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வேகன்ஆர் எக்ஸ்ட்ரா மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

விஎக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், வேகன்ஆர் எக்ஸ்ட்ரா மாடலில் டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்ஸஸரீகள் வழங்கப்பட உள்ளன. இயக்க ஆற்றலை வழங்க 1.0 லிட்டர் அல்லது 1.2 லிட்டர் மேனுவல் என இரு விதமான தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். இத்தகைய என்ஜின்கள் தான் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வழக்கமான மாருதி வேகன்ஆர் காரில் இருந்து வேறுபடுவதற்காக 13 விதமான அப்கிரேட்களை வேகன்ஆர் எக்ஸ்ட்ரா மாடல் பெற்றுள்ளது.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

இதில் உட்புற, வெளிப்புற மற்றும் தொழிற்நுட்ப அப்கிரேட்கள் அடங்குகின்றன. இந்த மொத்த ஆக்ஸஸரீ தொகுப்பிற்கான விலையாக ரூ.22,990 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிமிடெட் எடிசன் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

வெளிப்புற ஸ்டைலிங் ஆக்ஸஸரீகளில் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர் பாதுகாப்பான், பக்கவாட்டு ஸ்கிர்ட், சக்கர வளைவு க்ளாடிங், பாடிசைடு மோல்டிங், ஃபாக் விளக்கு கார்னிஷ், க்ரில் பகுதியின் க்ரோம் கார்னிஷ், பின்பக்க கதவு க்ரோம் கார்னிஷ் மற்றும் நம்பர் ப்ளேட் கார்னிஷ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

இவற்றுடன் சில ஆக்ஸஸரீகள் காரின் உட்புறத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்திற்கான ஆக்ஸஸரீகளில் மூன்று அம்சங்கள் அடங்குகின்றன. இதில் டிஜிட்டல் காற்று சுத்திகரிப்பான், ட்ரங்க் அமைப்பாளர் மற்றும் காற்று சார்ஜர் நீட்டிப்பு உள்ளிட்டவை உட்படுகின்றன.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

இந்த ஒட்டுமொத்த ஆக்ஸஸரீகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.30,009 ஆக வருகிறது. ஆனால் இவை அனைத்திற்கும் வாடிக்கையாளர் ரூ.23,000 செலுத்தினால் போதும் என்கிறது மாருதி சுஸுகி நிறுவனம். இத்தகைய விலை குறைப்பு நிச்சயம் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

இவற்றுடன் புதிய மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா மாடலில் கூடுதல் ஆக்ஸஸரீகளாக,

 • முன்பக்க பம்பர் பாதுக்காப்பான்- ரூ.3090
 • பின்பக்க பம்பர் பாதுக்காப்பான் - ரூ.2490
 • பக்கவாட்டு கூடுதல் அடிப்பகுதி - ரூ.6490
 • சக்கர மேற்புற வளைவுகள்- ரூ.5290
 • உடற்பகுதி மோல்டிங் - ரூ.2490
 • ஃபாக் விளக்கு கார்னிஷ் - ரூ.590
 • உள்ளிட்டவை அடங்குகின்றன.

  மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

  இவற்றுடன்

  • க்ரில்லின் மேற்பகுதிக்கு கார்னிஷ்- ரூ.790
  • பின்பக்க கதவு க்ரோம் கார்னிஷ்- ரூ.890
  • நம்பர் ப்ளேட் கார்னிஷ் - ரூ.499
  • உட்புற கேபினிற்கான தொகுப்புகள் - ரூ.5990
  • டிஜிட்டல் காற்று வாசனை திரவியம் - ரூ.2111
  • ட்ரங்க் அமைப்பாளர் - ரூ.1290
  • கார் சார்ஜர் நீட்டிப்பு - ரூ.999
  • போன்றவையும் மாருதியின் இந்த உயரமான ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

   மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

   மாருதி சுஸுகி வேகன்ஆர் மாடலில் இரு விதமான என்ஜின்கள் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்றான 1.0 லிட்டர் 3-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

   மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

   மற்றொரு என்ஜின் தேர்வான 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின்களுடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக வழங்கப்படுகிறது. சில வேரியண்ட்களில் மட்டும் கூடுதல் தேர்வாக ஏஎம்டி யூனிட் கொடுக்கப்படுகிறது.

   மாருதி வேகன்ஆர் எக்ஸ்ட்ரா எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! கூடுதல் வசதிகள் என்னென்ன? விரிவான விபரங்கள் இதோ

   மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஓட்டுனர் காற்றுப்பை, இபிடியுடன் ஏபிஎஸ், அதிவேகத்தை எச்சரிக்கும் அமைப்பு, முன்பக்க சீட்பெல்ட் அணியாததை எச்சரிக்கும் அமைப்பு மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Maruti suzuki set to launch new wagonr xtra edition with some changes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X