எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

90 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் முதன்முதலாக இந்தியாவில் கடந்த 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

அதில் இருந்து தற்போது வரையில் 23 லட்சத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்களை தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாவது தலைமுறை ஸ்விஃப்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

ஆனால் இதுவரையில் புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் குறித்த எந்த விபரத்தையும் மாருதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் 2021 ஸ்விஃப்ட் கார் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

ஃபேஸ்லிஃப்ட் அப்கிட்ரேடாக முன்பக்கத்தில் தேன்கூடு வடிவிலான டிசைனில் புதிய க்ரில் அமைப்பு புதிய ஸ்விஃப்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி புதிய அலாய் சக்கரங்களும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

அதேபோல் புதிய 1.2 லிட்டர் கே12என் ட்யுல்ஜெட் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் தேர்வையும் இந்த 2021 மாடலுக்கு வழங்க மாருதி திட்டமிட்டுள்ளது. டிசைர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

அதேநேரம் அதிகப்பட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய தற்போதைய 1.2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினும் ஸ்விஃப்ட்டில் தொடரப்படவுள்ளது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படவுள்ளது.

எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...

கருப்பு நிற உட்புற கேபினில் மாற்றம் இருக்காது. ஆனால் இருக்கை அமைப்பு மாற்றப்பட்டிருக்கலாம். மாருதி ஸ்விஃப்ட்டிற்கு விற்பனையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift Facelift India launch is expected very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X