கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் கார் ஸ்விஃப்ட் தான் என்பது பலருக்கு தெரிந்த விஷயம். மாருதி ஸ்விஃப்ட் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட்டை சமீபத்தில் சில காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் அறிமுகப்படுத்தியது.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

தோற்றத்தினால் வாடிக்கையாளர்களை கவரும் அதேவேளையில் மாடிஃபிகேஷன் பணிகளுக்காகவும் மாருதி ஸ்விஃப்ட் அதிகளவில் வாங்கப்படுகிறது. இந்த வகையில் காற்று சஸ்பென்ஷன் பொருத்தப்பட்ட ஸ்விஃப்ட்டை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

கோக்ஸ் மோட்டார்கிராஃபி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் மாடிஃபை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரை பார்க்க முடியும். இது மாருதியின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற ஸ்விஃப்ட் காராகும்.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

முன்பக்கத்தில் இந்த மாடிஃபை கார் பம்பருக்கு பதிலாக ஸ்விஃப்ட் ஸ்போர்ட் யூனிட்டை பெற்றுள்ளது. ஸ்விஃப்ட்டில் மாருதி நிறுவனம் வழங்கும் க்ரோம் பாகங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன, அதற்கு மாற்றாக அவை கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

எல்இடி டிஆர்எல் ஹெட்லைட்கள் அமைப்பின் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், ஹெட்லைட் காரின் நிறத்திற்கு ஏற்ப கூடுதல் வெள்ளை பிரகாசத்தை வழங்குகிறது. ஃபாக் விளக்குகள் சுற்றிலும் கருப்பு நிற கார்னிஷை பெற்றுள்ளன.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

இவை எல்லாவற்றையும் விட காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்லிப்பர் காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது. அப்படியே காரின் பக்கவாட்டு பகுதிக்கு வந்தோமேயானால், இங்கேயும் சைடு ஸ்கிர்ட்ஸை பார்க்க முடிகிறது.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

இந்த மாடிஃபை காரில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் இவை தான் இது மாடிஃபை செய்யப்பட்ட கார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

ஏற்கனவே கூறியதுதான், இந்த ஸ்விஃப்ட் காரில் என்1 கான்செப்ட்ஸின் காற்று சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது தான் கார் மிகவும் சாலைக்கு நெருக்கமாக, தாழ்வாக இருப்பதற்கு காரணமாகும். பின்பக்கத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் மேற்கூரையில் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

ஸ்விஃப்ட் காரின் பின்பக்கத்தில் வழங்கப்படும் லோகோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போல் பின்பக்கத்திலும் ஸ்டாக் பம்பருக்கு மாற்றாக ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வகையை சேர்ந்த பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

இவற்றுடன் பின்பக்கத்தில் குவாட் எக்ஸாஸ்ட் குழாய் முனைகளையும் பார்க்கலாம். ஆனால் இவை போலியானவையா அல்லது உண்மையில் பயன்படுபவையா என்பது தெரியவில்லை. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது போல் இந்த வீடியோவில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

கேரளாவில் தான் இப்படிப்பட்ட கார்களை எல்லாம் பார்க்க முடியும்!! ஏர் சஸ்பென்ஷன் உடன் 2021 மாருதி ஸ்விஃப்ட்!

மாருதி ஸ்விஃப்ட், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அமைப்பில் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதேநேரம் 2021 ஸ்விஃப்ட்டில் இந்த என்ஜின் உடன் 1.2 லிட்டர் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் தேர்வையும் மாருதி நிறுவனம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Third Gen Maruti Suzuki With Air Suspention. Read Full Details In Tamil.
Story first published: Sunday, April 25, 2021, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X