16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

Maruti Suzuki Swift கார் இந்தியாவில் விற்பனையில் தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றது. இக்கார் 16 ஆண்டுகளில் 2.5 மில்லியன் அலகுகள் விற்பனையைப் பெற்று நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை சூடியிருக்கின்றது. இந்நிகழ்வுகுறித்த இன்னும் பல முக்கிய தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஸ்விஃப்ட் (Swift) கார் மாடலும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ஓர் புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விற்பனை விகிதத்தில் இதுவரை எந்தவொரு ஹேட்ச்பேக் வாகனமும் செய்யாத ஓர் சாதனையை ஸ்விஃப்ட் செய்திருக்கின்றது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

ஒட்டுமொத்தமாக இதுவரை 2.5 மில்லியன் (25 லட்சம்) யூனிட் ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், இந்தியாவின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடலாக ஸ்விஃப்ட் உரு மாறியிருக்கின்றது. மாருதி மற்றும் சுசுகி கூட்டணியில் இக்கார் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

விற்பனைக்கு அறிமுகமானதில் இருந்து இப்போது ஸ்விஃப்ட் காரை அடித்துக் கொள்ள வேறு புதிய ஹேட்ச்பேக் தயாரிப்புகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை என்று கூறுமளவிற்கு மிக அமோக வரவேற்பை ஸ்விஃப்ட் பெற்று வருகின்றது. ஆம், ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்கு உள்ளான இடத்தை ஸ்விஃப்ட் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

இந்த நிலையிலேயே விற்பனைக்கு வந்து 16 வருடங்களில் 2.5 மில்லியன் யூனிட் விற்பனை என்ற மிக பிரமாண்ட வரவேற்பை ஸ்விஃப்ட் பெற்றிருக்கின்றது. கடந்த 2021 ஜனவரி மாதம் வரை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் ஒட்டுமொத்தமாக 2.3 மில்லியன் யூனிட் வரை மட்டுமே விற்பனையாகியதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

இதை அறிவித்து வெறும் 8 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் வரை ஸ்விஃப்ட் விற்பனையாகியிருக்கின்றது. இது மிகவும் பெரிய விற்பனை வளர்ச்சியாகும். இத்தகைய விற்பனையை வளர்ச்சியைக் கண்டு ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமே தற்போது ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

2020-2021 நிதியாண்டின் மிக சிறந்த விற்பனையாகும் கார் என்ற பட்டத்தை ஸ்விஃப்ட் பெற்றிருக்கின்றது. சுமார் 1,72,671 யூனிட்டுகள் வரை இந்த நிதியாண்டில் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி இருந்தன. இதன் போட்டியாளரான Hyundai Grand i10 Nios (ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்) 1,00,611 யூனிட் வரை விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

அதேநேரத்தில் மற்றுமொரு போட்டியாளராக கருதப்படும் Volkswagen Polo (ஃபோக்ஸ்வேகன் போலோ) வெறும் 16,164 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதேபோல், ஃபோர்ட் ஃபிகோ (Ford Figo) மிகவும் குறைவான விற்பனையையேப் பெற்றிருந்தது. வெறும் 1804 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையானது. இத்தகைய குறைந்த விற்பனை காரணத்தினாலேயே ஃபோர்டு நிறுவனம் தற்போது இந்திய வாகன சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பது மூன்றாவது தலைமுறை ஸ்விஃப்ட் ஆகும். இதன் முதல் தலைமுறை மே25 2005ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் முதல் தலைமுறை 5 லட்சம் யூனிட் விற்பனை என்ற இலக்கை கடந்த 2010ம் ஆண்டுதான் பெற்றது. இதையடுத்து இரண்டாம் தலைமுறை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

2010 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு 10 லட்சம் என்ற மிக உச்சபட்ச விற்பனை இலக்கை அது எட்டியது. இதையடுத்து 2018ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இது அந்த ஆண்டே 20 லட்சம் யூனிட் என்ற மிக அமோகமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றது. இவ்வாறு தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் உச்சத்தையேக் கண்டு, தற்போது நாட்டின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக ஸ்விஃப்ட் மாறியிருக்கின்றது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

தற்போது மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் 1.2 லிட்டர் கே சீரியல் ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது 1197 சிசி திறனை வெளியேற்றக் கூடிய 4 சிலிடண்டர் மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

16 ஆண்டுகள்... 2.5 மில்லியன் அலகு விற்பனை... கெத்து காட்டும் Maruti Suzuki Swift! செம்ம மாஸான சம்பவம்!

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த எஞ்ஜினில் வழங்கப்படுகின்றன. இத்துடனம் 7 விதமான வேரியண்டுகளிலும் ஸ்விஃப்ட் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இக்காரின் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 5.85 லட்சம் ஆகும். இதன் உச்சபட்ச மாடலின் விலை ரூ. 8.53 லட்சம் ஆகும். இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Most Read Articles
English summary
Maruti suzuki swift reaches 25 lakh units sales milestone in india
Story first published: Tuesday, September 14, 2021, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X