விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் விற்பனை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் நிஸான் நிறுவனம் மேக்னைட் காரையும், ரெனால்ட் நிறுவனம் கைகர் காரையும் புதிதாக களமிறக்கியுள்ளன.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

மிகவும் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்த 2 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனையும் சிறப்பாக உள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் விட்டாரா பிரெஸ்ஸா காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த காரின் ஆரம்ப விலை 7.39 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

இதை காட்டிலும் குறைவான விலையில் இந்த செக்மெண்ட்டில் கார்கள் உள்ளன. எனவே இந்திய சந்தையில் விலை குறைவான புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கார்டாக் செய்திவெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு கீழாக இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும்.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ஒய்டிபி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை பற்றி பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

எனினும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ ஆகிய கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் ட்யூயல் ஜெட் இன்ஜின்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

இந்த காரில் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஏற்கனவே விற்பனையில் உள்ள விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை வெர்ஷனை உருவாக்கும் பணிகளிலும் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விட்டாரா பிரெஸ்ஸாவை விட குறைவான விலை... புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை களமிறக்குகிறது மாருதி சுஸுகி...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போவது உறுதி. ஏற்கனவே புதிய மாடல்களின் வருகையால், இந்த செக்மெண்ட்டில் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Maruti Suzuki To Launch A Baleno-Based Compact SUV - Here Are The Details. Read in Tamil
Story first published: Saturday, March 27, 2021, 19:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X