ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு இருக்கை வெர்சனாக அல்கஸார் கொண்டுவரப்படுவதினால் மாருதி எர்டிகா & எக்ஸ்எல்6 கார்கள் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

எர்டிகா எம்பிவி காரின் ப்ரீமியம் வெர்சனாக எக்ஸ்எல்6 காரை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. எர்டிகா மாருதியின் அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

ஆனால் எக்ஸ்எல்6 நெக்ஸா ப்ரீமியம் ஷோரூம்களில் விற்கப்படுகிறது. இரண்டாவது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கை அமைப்பு மற்றும் முன்பக்கத்தில் எர்டிகாவில் இருந்து எக்ஸ்எல்6 வேறுபடுகிறது.

எர்டிகாவின் இரண்டாம் தலைமுறை கார் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரையில் கிட்டத்தட்ட 6.5 வருடங்களாக எர்டிகாவின் முதல் தலைமுறை கார் விற்பனையில் இருந்தது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

எம்பிவி கார் விற்பனையில் மாருதியின் மிக பெரிய ஆயுதமாக எர்டிகா உள்ளது. இருப்பினும் மூன்று இருக்கை வரிசை கொண்ட எஸ்யூவி கார்களின் வருகை அதிகரித்து வருவதால் எர்டிகாவை அப்கிரேட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாருதி தள்ளப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

இந்த நிலையில் தற்போது காடிவாடி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள தகவலின்படி பார்க்கும்போது, மாருதி எர்டிகா & எக்ஸ்எல்6 கார்கள் குறிப்பிடத்தக்க வகையிலான அப்கிரேட்களை வரும் மாதங்களில் பெறலாம்.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

இந்த மாருதி கார்களில் கூடுதல் வசதிகளாக கூடுதல் காற்றுப்பைகள், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி, பெரிய அளவிலான டயர்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு முக்கிய போட்டி நிறுவனமாக விளங்கும் ஹூண்டாயில் இருந்து விரைவில் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சன் அல்கஸார் வெளிவரவுள்ளது. க்ரெட்டா ஏற்கனவே அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராக இருப்பதால் 7-இருக்கை கார்களுக்கு இடையேயான போட்டி மேலும் தீவிரமாகும்.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

தற்சமயம் மாருதி எர்டிகா விலைகள் ரூ.7.69 லட்சத்தில் இருந்து ரூ.10.47 லட்சம் வரையில் உள்ளன. ஜெட்டா மற்றும் ஆல்பா என இரு விதமான வேரியண்ட்களில் எக்ஸ்எல்6 விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

இந்த வேரியண்ட்களின் விலைகள் ரூ.9.84 லட்சம் மற்றும் ரூ.11.61 லட்ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள. எக்ஸ்எல்6 காரின் இந்த வேரியண்ட்களுக்கு ஆற்றலை வழங்க 104.7 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் கே15பி டிஒஎச்சி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படுகிறது. அதேநேரம் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக எர்டிகாவை அப்கிரேட் செய்யும் மாருதி சுஸுகி!!

அப்டேட் செய்யப்பட்ட எர்டிகா & எக்ஸ்எல்6 காரின் இயந்திர பாகங்களில் எந்தவொரு வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை. இவற்றுடன் புதிய தலைமுறை செலிரியோ கார்களின் தயாரிப்பு பணிகளிலும் மாருதி நிறுவனம் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Updated Maruti Ertiga & XL6 Coming Soon, Alcazar Effect.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X