என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா லோகோவுடன் சாலையில் வலம் வந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

மாருதி நிறுவனத்தின்கீழ் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் மின்சார கார் மாடலாக வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி வந்தநிலையில் தற்போது அக்காரை நிரூபர்கள் சிலர் டொயோட்டா பேட்ஜுடன் சாலையில் வலம் வருவதைக் கண்டிருக்கின்றனர்.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

இதனால், வாகன உலகில் பெரும் பரபரப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டொயோட்டோ லோகோவுடன் சாலையில் சுற்றி திரிந்த வேகன்ஆர் தோற்றத்திலான எலெக்ட்ரிக் காரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிக அதிக வேகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்கள் சிலவற்றை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் (சின்னத்தை மாற்றி) செய்து தனது நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. பலினோவை க்ளான்ஸா எனும் பெயரிலும், விட்டாரா ப்ரெஸ்ஸாவை அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும் அது விற்பனைச் செய்து வருகின்றது.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

மிக விரைவில் மாருதி சியாஸ் மாடலை டொயோட்டா பெல்டா எனும் பெயரில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இவையனைத்தும் ஏற்கனவே விற்பனையில் இருக்கக் கூடிய உள் எரிப்பு எஞ்ஜின் கொண்ட கார்களாகும். ஆனால், தற்போது டொயோட்டா ரீபேட்ஜ் செய்திருப்பது இன்னும் விற்பனைக்கே வராத ஓர் மின்சார தயாரிப்பாகும்.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

எனவேதான், இக்கார்குறித்த தகவல் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்யும் அனைத்து மாருதி தயாரிப்புகளிலும் மிக அதிகளவிலான பிரீமியம் வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

Image Courtesy: MRD Cars

ஆகையால், தற்போது ரீபேட்ஜ் செய்யப்பட்டிருக்கும் மாருதி சுசுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் காரிலும் அதிக பிரீமியம் வசதிகள் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

டொயோட்டா ரீபேட்ஜிலான வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் எந்தவொரு மறைப்புகளும் இன்றி காட்சிக்குள்ளாகியிருக்கின்றது. இது எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வேகன்ஆர் காரைக் காட்டிலும் கணிசமான மாற்றப்பட்ட உருவ அமைப்பைப் பெற்றிருக்கின்றது.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

புதுப்பிக்கப்பட்ட முகப்பு பகுதி, தனி தனியான ஹெட்லேம்ப், அலாய் வீல், எல்இடி வால் பகுதி மின் விளக்கு என பல்வேறு தனித்துவமான உடல் கூறுகளால் இக்கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவையே வழக்கமான மாருதி வேகன் ஆர் காருக்கும், டொயோட்டா ரீபேட்ஜ் செய்யப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் காருக்கும் இருக்கும் வித்தியாசங்கள் ஆகும்.

என்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா?.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு!!

Source: Gaadiwale

கடந்த காலங்களில் இதே வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் ஸ்பை செய்யப்பட்டபோது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில், முழுமையான சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜிலும், ரூ. 9.5 லட்சத்திற்கும் குறைவான விலையிலும் அது விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. எனவேதான் இந்தியர்களின் எதிர்பார்ப்பில் முக்கிய இடத்தை இக்கார் பிடித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்தில் காட்சியளித்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti Wagon-R EV Spotted While Testing But Wearing Toyota Badges. Read In Tamil.
Story first published: Saturday, May 29, 2021, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X