மணிக்கு 350கிமீ வேகம்! ஒற்றை சார்ஜில் 700கிமீ ரேஞ்ஜ்! விரைவில் நாட்டை அசத்த வருகிறது அசானி எலெக்ட்ரிக் கார்!

முதல் முறையாக இந்திய சூப்பர் கார் மின்சார வாகன சந்தையில் மீன் மெட்டல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அசானி எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த கார்குறித்த இன்னும் பல சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளே முக்கிய காரணமாகும். ஆம், இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மக்களை மின் வாகனங்களின் பக்கம் நோக்கி நகர்த்த வேண்டும் என்பதற்காக மானியம், வரி சலுகை உள்ளிட்டவற்றை அரசுகள் வழங்கி வருகின்றன. இதன் விளைவாக கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தியாவில் மின் வாகனங்களின் பயன்பாடு பெருமளவில் உயர்ந்துள்ளது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இதேபோன்று, விற்பனைக்குக் கிடைக்கும் மின் வாகனங்களின் அளவும் கணிசமாக உயர தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, புதுமுக மின் வாகனங்களின் அறிமுகத்திற்கு இந்தியாவில் பஞ்சமின்றி காணப்படுகின்றது. முன்னணி நிறுவனங்கள் தொடங்கி ஆரம்ப நிலை நிறுவனங்கள் வரை தங்களின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

அந்தவகையில், மீன் மெட்டல் மோட்டார்ஸ் (Mean Metal Motors) என்றழைக்கப்படும் ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் விரைவில் அறிமுகம் அசானி (Azani) என்ற பெயர் கொண்ட எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இது சூப்பர் கார் ரக எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் சூப்பர் ரக கார் இதுவே ஆகும். ஆகையால், இந்திய மின் வாகன ஆர்வலர்களை மட்டுமின்றி சூப்பர் கார் பிரியர்கள் மத்தியிலும் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

மீன் மெட்டல் மோட்டார்ஸ் அசானி எலெக்ட்ரிக் சூப்பர் காரானது உச்சபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு நூறு கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 2 செகண்டுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுமளவிற்கு மிக மிக அதிக திறன் வாய்ந்ததாக இருக்கின்றது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

அசானி எலெக்ட்ரிக் சூப்பர் காரில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டாரானது 986 பிஎச்பி திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 550 கிமீ தொடங்கி 700 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என மீன் மெட்டல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த சூப்பர் திறன் எலெக்ட்ரிக் காரே மிக மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதன் வருகை வரும் 2022ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் முன் மாதிரி மாடல் அசானி காரே அறிமுகமாக இருக்கின்றது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இதன் வெளியீட்டை முன்னிட்டு தற்போது தயாரிப்பாளர் அக்காரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் அசானி எலெக்ட்ரிக் கார்குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் மிட்-எஞ்ஜின் கொண்ட இரு கதவு கூபே ரக காராகும்.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இத்துடன் எலெக்ட்ரிக் காரை அலங்கரிக்கும் விதமாக எல்இடி ஹெட்லேம்ப், ஃபிளார்ட் வீல் ஆர்ச்சுகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது, காரின் வெளிப்புற தோற்றம் பற்றிய தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆகையால், உட்புறம் பற்றிய எந்தவொரு தகவலும் தெரிய வரவில்லை.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

மீன் மெட்டல் மோட்டார்ஸ் அசானி எலெக்ட்ரிக் கார் 1,20,000 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 89 லட்சம் ஆகும். மின்சார வாகனம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நிலவும் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் மீன் மெட்டல் மோட்டார்ஸ் இக்காரை உருவாக்கி வருகின்றது.

மணிக்கு 350கிமீ வேகத்துல போகும்! ஒற்றை சார்ஜில் 700கிமீ வரை போகலாம்! விரைவில் நாட்டில் அறிமுகமாகிறது அசானி எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இதே கருத்தைக் கொண்டே தனது எதிர்கால தயாரிப்புகளையும் தயாரிக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி தன்னுடைய தயாரிப்புகளை குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனித்துவமான தயாரிப்பு யுக்தியை அது கையாள தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Mean metal motors previews azani electric supercar
Story first published: Thursday, August 5, 2021, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X