சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் (Mercedes Benz A-Class Limousine) இந்திய சந்தையில் இன்று (மார்ச் 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏ 200, ஏ 200டி மற்றும் ஏ 35 ஏஎம்ஜி என மொத்தம் மூன்று வேரியண்ட்களில், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் விற்பனை செய்யப்படவுள்ளது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

இதில், ஏ 35 ஏஎம்ஜி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் இரண்டாவது ஏஎம்ஜி மாடல் என்ற பெருமையை இது பெறுகிறது. மேட் இன் இந்தியா மாடல் என்பதால், சவாலான விலை நிர்ணயத்தை மெர்சிடிஸ் பென்ஸ் செய்துள்ளது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டிலேயே ஏ-க்ளாஸ் லிமோசினை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக அதன் அறிமுகம் தள்ளிப்போனது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வழியாக தற்போது இந்திய சந்தையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் அம்சங்களுடன், ஏ-க்ளாஸ் லிமோசின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

இந்த காரின் முன் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லோகோவுடன் பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் பெற்றுள்ளது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

இதில், பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், இன்போடெயின்மெண்ட் சிஸ்டமிற்காக ஒன்று மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக ஒன்று என ட்யூயல் ஸ்க்ரீன்கள், எம்பியூஎக்ஸ் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

நீங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொறுத்து, மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கிடைக்கும். இதன்படி ஏ 200 வேரியண்ட்டில், 163 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். அதே சமயம் ஏ 200டி வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

இந்த இன்ஜின் 150 ஹெச்பி பவரை உருவாக்க கூடியது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் காரின் பெட்ரோல் வேரியண்ட்டில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாகவும்ம், டீசல் வேரியண்ட்டில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாகவும் இன்ஜின் சக்தியானது முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

அதே நேரத்தில் ஏ 35 ஏஎம்ஜி வேரியண்ட்டில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 306 ஹெச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

அத்துடன் மெர்சிடிஸ் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் காரின் விலை இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஏ 200 வேரியண்ட்டின் விலை 39.90 லட்ச ரூபாய் ஆகவும், ஏ 200டி வேரியண்ட்டின் விலை 40.90 லட்ச ரூபாய் ஆகவும், ஏ 35 ஏஎம்ஜி வேரியண்ட்டின் விலை 56.24 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

A-Class Price
200 ₹39.90 Lakhs
200d ₹40.90 Lakhs
AMG A 35 4Matic ₹56.24 Lakhs
சூப்பரான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின்... எவ்ளோ தெரியுமா?

அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 30ம் தேதி வரை மட்டுமே இந்த அறிமுக சலுகை விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கார் கிடைக்கும். அதன் பிறகு ஏ-க்ளாஸ் லிமோசின் காரின் விலையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

English summary
Mercedes-Benz A-Class Limousine Launched In India: Design, Price, Variants, Engine Options & More. Read in Tamil
Story first published: Thursday, March 25, 2021, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X