பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

வருகிற ஜனவரி 15ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது கார்களின் விலைகளை உயர்த்துள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

இந்த 2021ஆம் ஆண்டிற்கான இந்த விலை உயர்வின்படி அனைத்து பென்ஸ் கார்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் 5 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன. அதேநேரம் ‘மெர்சிடிஸ் மீ கனெக்ட்' போன்ற தொழிற்நுட்ப அம்சங்களையும் தயாரிப்புகளில் கொண்டுவர மெர்சிடிஸ் திட்டமிட்டு வருகிறது.

பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மார்டின் ஸ்க்வெங்க் கருத்து தெரிவிக்கையில், "மெர்சிடிஸ் பென்ஸில், எம்எம்சி தொழில்நுட்பம் போன்ற சமீபத்திய அம்சங்களுடன் செறிவூட்டப்பட்ட தயாரிப்பு இலாகாவை நாங்கள் வழங்குகிறோம்.

பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

மேலும் குறிப்பிட்ட மாடல்களில் புதிய தயாரிப்பு மேம்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். நாங்கள் ஒரு நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான வணிகத்தை நடத்தி வருகிறோம்; இருப்பினும், பாகங்களின் விலை அதிகரிப்பினால் தயாரிப்புகளின் விலைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டியுள்ளது.

பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

எங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் புதிய விலை வரம்பு பிராண்டின் பிரீமியம் விலை நிலைப்பாட்டை உறுதி செய்யும், மேலும் இது பிராண்டுக்கும் எங்கள் டீலர் கூட்டாளர்களுக்கும் நிலையான வளர்ச்சியையும் உறுதி செய்யும் என கூறினார்.

பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

கடந்த 6-ல் இருந்து 7 மாதங்களில் யூரோ உடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு வலுவிழந்துள்ளது. இதனால் கார் பாகங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதுவே ஒட்டுமொத்த தயாரிப்பு செலவு அதிகரிப்பிற்கு காரணமாகும்.

பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.15 லட்சம் வரையில் உயருகிறது!! இப்போதே முன்பதிவு செய்வதுதான் நல்லது!

இதற்காகவே இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையை மெர்சிடிஸ் நிறுவனம் கொண்டுவருகிறது. வரும் 15ஆம் தேதியில் இருந்து பென்ஸ் கார்களின் விலைகள் ரூ.2 லட்சத்தில் (சி-கிளாஸ்) இருந்து அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் (ஏஎம்ஜி ஜிடி 63எஸ் 4-கதவு) வரையில் அதிகரிக்கப்படவுள்ளன.

Most Read Articles
English summary
Mercedes-Benz India to increase the ex-showroom price of its model range, starting 15-January, 2021
Story first published: Friday, January 8, 2021, 23:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X