2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு மீண்டும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான இக்யூசி 400 காரை இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 99.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சிபியூ வழியில் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி முதல் பேட்ஜில் வெறும் 50 இக்யூசி எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, அவை அனைத்தும் கடந்த 2020ம் ஆண்டின் இறுதியிலேயே விற்பனையாகி விட்டன. இதை தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வரும் மாதங்களில் இரண்டாவது பேட்ஜில் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவுள்ளது.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

இரண்டாவது பேட்ஜில் இந்தியாவிற்கு இறக்குமதியாகவுள்ள இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

ஆனால் இரண்டாவது பேட்ஜில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எத்தனை இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யும் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

இதில், எல்இடி பகல் நேர விளக்குகளுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், 20 இன்ச் அலாய் வீல்கள், மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், பிரேக் அஸிஸ்ட், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தகுந்தவை. இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளையும் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் முன் பகுதியில் ஒன்று, பின் பகுதியில் ஒன்று என மொத்தம் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 எலெக்ட்ரிக் மோட்டார்களும் ஒருங்கிணைந்து 405 பிஎச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த காரின் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 80kW லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பையும் உள்ளடக்கியதாக உள்ளது.

2வது பேட்ஜ் விரைவில் இறக்குமதி! மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு தொடக்கம்

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரின் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 471 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவியை தொடர்ந்து வரும் காலங்களில் இன்னும் பல்வேறு சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன.

Most Read Articles
English summary
Mercedes-Benz EQC Electric SUV Bookings Reopen: Here Are All The Details. Read in Tamil
Story first published: Thursday, March 18, 2021, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X