மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

மெர்சிடிஸ் இக்யுஎஸ் எலக்ட்ரிக் செடான் காரை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

மெர்சிடிஸின் அனைத்து-எலக்ட்ரிக் ப்ளாட்ஃபாரத்தை முழுமையாக சார்ந்து உருவாக்கப்படும் முதல் தயாரிப்பு இக்யுஎஸ் ஆகும். மெர்சிடிஸ் லோகோ உடன் இந்த எலக்ட்ரிக் கார் மூடிய க்ரில் அமைப்பை கொண்டுள்ளது.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

ஸ்வெப்ட்பேக் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மெர்சிடிஸ் இக்யுஎஸ் கார் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான அருமையாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்போர்டியான பண்பிற்காக அதிநவீன தொடுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

முன்பக்கத்தை போல் காரின் பின்பக்கமும் எளிமையானதாக தற்போதைய மாடர்ன் கார்களுக்கு ஏற்ற தோற்றத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டு பழமையானதானது மெர்சிடிஸ்-பென்ஸ்.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

இருந்தாலும், இளம் தலைமுறையினருக்கு எவ்வாறு கார்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மெர்சிடிஸ் தெளிவாக தெரிந்து வைத்துள்ளது. உலகிலேயே மிகவும் காற்று இயக்கவியலுக்கு இணக்கமாக உருவாக்கப்பட்ட காராக தற்சமயம் மெர்சிடிஸ் இக்யுஎஸ் விளங்குகிறது.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

இந்த காரின் இழுவை குணகம் 0.20சிடி ஆகும். இது 2021 மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான் காரை காட்டிலும் சிறப்பான இழுவை குணகமாகும். ஏனெனில் அந்த செடான் காரின் இழுவை குணகம் சற்று அதிகமாக 0.22சிடி என உள்ளது.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

இந்த எலக்ட்ரிக் காரின் மிக முக்கிய ஹைலைட் என்னவென்றால், 55 இன்ச்சில் உட்புற கேபினில் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள மைய கன்சோல் தான். மைய கன்சோலில் 'எம்பக்ஸ்' என மெர்சிடிஸ் நிறுவனம் அழைக்கும் ஹைப்பர் திரை வழங்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

இக்யுஎஸ் எலக்ட்ரிக் காரில் இரு பேட்டரி தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அதிகப்பட்சமாக 700கிமீ வரையில் காரை இயக்கி செல்லக்கூடியவை என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது. மேலும், இவற்றின் உதவியுடன் 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

மெர்சிடிஸ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன் உதாரணமாக இக்யுஎஸ் விளங்கவுள்ளது. மெர்சிடிஸ் இக்யு வரிசையில் உள்ள இக்யுஏ, இக்யுபி, இக்யுவி, இக்யுஇ மற்றும் ஏஎம்ஜி இக்யு கார்களுடன் இந்த எலக்ட்ரிக் கார் இணையவுள்ளது.

மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் இந்த 2021ஆம் வருடம் முடிவதற்கு உள்ளாக 7 புதிய ஏஎம்ஜி கார்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. இதில் சில கார்கள் மஹாராஷ்டிராவில் உள்ள மெர்சிடிஸின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. சில ஏஎம்ஜி கார்கல் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

Most Read Articles
English summary
Mercedes-Benz EQS Luxury Electric Vehicle Revealed. The New Standard For Luxurious EVs?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X