2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான தனது திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

இந்திய சந்தையில் 2021ம் ஆண்டுக்கான தனது விற்பனை திட்டங்களை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி 2021ம் ஆண்டு இந்திய சந்தையில் மொத்தம் 15 மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதில், புதிய மாடல்களும், ஃபேஸ்லிஃப்ட்களும் அடங்கும்.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு மொத்தம் 10 மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த வரிசையில் 2021ம் ஆண்டிலும் தங்களது சிறப்பான விற்பனை திட்டங்களை செயல்படுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது விற்பனை திட்டங்களை புதிய ஏ-க்ளாஸ் லிமோசின் செடானில் இருந்து தொடங்கவுள்ளது.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

இதுதான் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள முதல் மாடல் ஆகும். மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் செடான் முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வரும் வாரங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

ஏ-க்ளாஸ் லிமோசின் செடான் தவிர இன்னும் பல்வேறு புதிய மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இதில், புதிய ஜிஎல்ஏ, புதிய எஸ்-க்ளாஸ் மற்றும் இ-க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகியவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

அத்துடன் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. நடப்பாண்டில் ஏதேனும் ஒரு சமயத்தில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

2021ம் ஆண்டுக்கான விற்பனை திட்டங்களை வெளியிட்டதுடன் மட்டுமல்லாது, 2020ம் ஆண்டு இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் தங்களது செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2020ம் ஆண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 7,893 கார்களை விற்பனை செய்துள்ளது.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 42 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, தனது போட்டி நிறுவனங்களை காட்டிலும் மெர்சிடிஸ்-பென்ஸ் நல்ல நிலைமையில்தான் உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக மற்ற அனைத்து நிறுவனங்களையும் போலவே, 2020ம் ஆண்டின் முதல் பாதியில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் மிகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டது.

2021ம் ஆண்டுக்கான திட்டங்களை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்... இத்தனை புதிய கார்கள் விற்பனைக்கு வரப்போகிறதா?

எனினும் கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சரிவில் இருந்து மீண்டு வந்தது. மூன்றாவது காலாண்டில் மொத்தம் 2,886 கார்களை விற்பனை செய்த மெர்சிடிஸ்-பென்ஸ், 42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. அத்துடன் இதன் மூலமாக இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து 6வது ஆண்டாக தனது முன்னிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz India Confirms 15 Product Launches In 2021 - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X