இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

உலகின் சிறந்த காராக விளங்கும் எஸ்-க்ளாஸ் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு முதன்முறையாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் அல்ட்ரா-லக்சரி செடான் காரான எஸ்-க்ளாஸை மேட்-இன்-இந்தியா தயாரிப்பாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் புனே, சாகான் தொழிற்சாலையில் புதிய எஸ்-க்ளாஸையும் சேர்த்து தற்சமயம் 13 மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

இந்த தொழிற்சாலையில் இதுவரையில் 1.3 லட்ச பென்ஸ் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடர்ன் தகவல்கள் தொழிற்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் 'கார் டூ எக்ஸ்' தொடர்புகளை கொண்ட காராக புதிய எஸ்-க்ளாஸ் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ளது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ள புதிய எஸ்-கிளாஸின் ஆரம்ப விலை (350டி வேரியண்ட்) ரூ.1.57 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த லக்சரி செடான் காரின் அதிகப்பட்ச விலையாக எஸ்-கிளாஸ் எஸ்450 வேரியண்ட்டிற்கு ரூ.1.62 கோடி கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

இதுவரையில் சிபியூ முறையில், அதாவது முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு இந்த மெர்சிடிஸ் லக்சரி செடான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இனி இந்தியாவிலேயே எஸ்-க்ளாஸ் தயாரிக்கப்பட உள்ளதால், இதன் விலைகள் கவனிக்கத்தக்க அளவில் குறைந்துள்ளன. அதேபோல் சிபியூ மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய எஸ்-க்ளாஸ் சில மாற்றங்களை ஏற்றுள்ளது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

குறிப்பாக புதிய எஸ்-க்ளாஸின் உட்புற கேபின் பிரிவில்-சிறந்த தொழிற்நுட்பங்களுடன் மிக புத்துணர்ச்சியான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஏற்கனவே டீசர் மூலமாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்சமயம் தங்களது அதிகளவில் விற்பனை செய்யப்படும் கார்களாக இ-கிளாஸ் மற்றும் ஜிஎல்சி தொடர்வதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான மார்டின் ஸ்வெங்க் தெரிவித்துள்ளார்.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

சிபியூ எஸ்-கிளாஸ் வெர்சனில் வழங்கப்பட்ட பெரும்பாலான வசதிகள் மற்றும் என்ஜின் தேர்வுகள் புதிய தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரிலும் தொடரப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் கடந்த 9 மாதங்களில் (2021 ஜனவரி- செப்டம்பர்) மெர்சிடிஸ் நிறுவனம் மொத்தம் 8,958 கார்களை விற்பனை செய்துள்ளது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

மிக முக்கிய அப்டேட்டாக, சிபியூ செர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஎம்ஜி லைனிற்கு மாற்றாக வழக்கமான எஸ்-கிளாஸ் மாடல் தான் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இவை இரண்டிற்கும் தோற்றத்தில் வித்தியாசமாக, முன்பக்க பம்பரின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக க்ரோம் தொடுதல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

அதேபோல் அலாய் சக்கரங்களின் வடிவமும் சிறியதாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எஸ்-கிளாஸ் செடான் (சிபியூ முறையில்) கார் ஆர்வலர்களிடையே மிக பெரிய கவனத்தை பெற்றது. இதனால் சமூக ஊடகங்கள் இந்த பென்ஸ் காரினை புகழ்ந்து, 'உலகின் சிறந்த கார்' என செய்திகள் வெளியிட்டன.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

உண்மையில், மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த லக்சரி கார் என்ற விருதை பெற்றுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்த லக்சரி செடான் காருக்கு இந்தியாவில் கிடைத்த இந்த அதிகப்படியான வரவேற்பினை பார்த்துதான் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த காரினை இந்தியாவிலேயே தயாரிக்கும் முடிவிற்கு வந்தது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

தற்சமயம் புதிய தலைமுறை உடன் விற்பனை செய்யப்படும் எஸ்-கிளாஸ் மாடல் எப்போதும் ஆட்டோமொபைல் துறையில் புதிய ஸ்டாண்டர்டை உருவாக்க கூடியது. இத்தகைய கார் இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது, மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவன குழுவினருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

புதிய எஸ்-கிளாஸை மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்வெங்க் மற்றும் பியூஷ் அரோரா ஆகியோர் டிஜிட்டல் ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளனர். முன்னதாக 2021 எஸ்-கிளாஸ் எஸ்450 4மேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.17 கோடியாகவும், எஸ்450 4மேட்டிக் காரின் விலை ரூ.2.19 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான்!! புதிய விலைகளில் அறிமுகம்

புதிய எஸ்-கிளாஸ் எஸ்350டி 4மேட்டிக் வேரியண்ட்டில் 2925சிசி இன்லைன் 6-சிலிண்டர் என்ஜினும், எஸ்450 4மேட்டிக் வேரியண்ட்டில் 2999சிசி, இன்லைன் 6-சிலிண்டர் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு லக்சரி செடான் கார்களின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz S-Class launched at a more affordable ₹1.57 crore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X