பயமே இல்லாம போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆயிரம் கிமீ தூரம் பயணிக்கக் கூடிய மின்சார காரை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று மிக விரைவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எந்த நிறுவனம், காரின் கூடுதல் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 1,000 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் காரை மிக விரைவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொகுசு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனமே மிக அதிக ரேஞ்ஜை வெளிப்படுத்தும் மின்சார காரை விரைவில் வெளியீடு செய்ய இருக்கும் நிறுவனம் ஆகும்.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் (Vision EQXX) எனும் பெயரில் பென்ஸ் நிறுவனம் ஓர் கான்செப்ட் (முன் மாதிரி) மாடலை உருவாக்கி இருக்கின்றது. இந்த மாடலே ஒற்றை முழுமையான சார்ஜில் 1,000 கிமீ தூரம் பயணிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கும் மின்சார காராகும். இதனை வரும் 2022 ஜனவரி 3ம் தேதி அன்று வெளியீடு செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

டைம்லர் குழுமத்தின் ரிசர்ச் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் நிறுவனத்தின் சிஓஓ-ஆன மார்க்கஸ் ஷாஃபர், அவரது அதிகாரப்பூர்வ லிங்க்ட்இன் கணக்கில் கூறியிருப்பதாவது, "இந்த மின்சார வாகனம் தற்போது நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் பிற எலெக்ட்ரிக் கார் மாடல்களைக் காட்டிலும் மிகவும் திறமையானதுட என தெரிவித்திருக்கின்றார்.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

தொடர்ந்து, "நகரம் அல்லாத நெடுஞ்சாலைகளில் இயக்கும்போது மிக ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும்" அவர் கூறியிருக்கின்றார். மேலும், "மிகவும் குறைவான மின் நுகர்வில் மிக அதிக பயன்பாட்டை வழங்கும் வகையில் புதிய பென்ஸ் விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக" அவர் கூறினார்.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

ஆகையால், மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் மிகவும் திறன் வாய்ந்த காராக விற்பனைக்கு வரும் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், தற்போது வரை இதுமாதிரியான குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. கார் பற்றிய வெறு எந்த முக்கிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

வெளியீடு வரை அவை ரகசியம் காக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியிருக்கும் டீசர் படம், விரைவில் வெளியீட்டைப் பெற இருக்கும் விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் இவி, செடான் ரக வாகனமாக இருக்கலாம் என்பதை வெளிக்காட்டுகின்றது.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

தொடர்ந்து, இந்த காரின் வெளியீடு எப்போது அமையும் என்ற ஆவலையும் இந்த டீசர் மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் மின் வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, சொகுசு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் சற்றே டிமாண்ட் கூடுதலாக காட்சியளிக்கின்றது.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மினி நிறுவனத்தின் மின்சார கார் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறுவதற்கு முன்னரே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. முன் பதிவு பணிகள் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அனைத்து யூனிட்டுகளுக்கான புக்கிங்குகளும் நிறைவுற்றது குறிப்பிடத்தகுந்தது.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உலக நாடுகள் அனைத்திலும் நிலவி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே அதிக ரேஞ்ஜ் மற்றும் சொகுசு வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு பென்ஸ் நிறுவனம் புதிய விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் கான்செப்ட் மாடலை உருவாக்கி இருக்கின்றது.

பயமே இல்லா போகலாம்... 1000 கிமீ போக கூடிய மின்சார காரை உருவாக்கிய பிரபல நிறுவனம்! டீசர் படம் வெளியீடு!

இந்த வாகனம் எப்போது உற்பத்தி நிலைக்கு உயர்த்தப்படும் மற்றும் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. மிக விரைவில் இக்காரை நிறுவனம் உற்பத்திக்குக் கொண்டு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவல்கள் மிக விரைவிலேயே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: முதல் மூன்று படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Mercedes benz planning to unveil vision eqxx concept on 2022 january
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X