2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏழாம் தலைமுறை எஸ்-க்ளாஸ் செடானின் கடைசி டீசர் வீடியோவை அதன் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2021 மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் கார் உலகளவில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த டபிள்யூ223 எஸ்-க்ளாஸ் செடான் காரை ஜூன் 17ஆம் தேதி மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்கிடையில் தான் தற்போது இந்த 2021 பென்ஸ் காரின் டீசர் வீடியோ மெர்சிடிஸின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் காரின் பறிப்பு-இழுத்தல் ஸ்டைலில் உள்ள கதவு கைப்பிடிகளை மட்டுமே பார்க்க முடிகிறது.

2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஆனால் உண்மையில் புதிய தலைமுறை எஸ்-க்ளாஸ் அதன் தற்போதைய தலைமுறையை காட்டிலும் தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் பல படிகள் முன்னேறி இருக்கும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸின் எஸ்500 வேரியண்ட்டில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் மோட்டார் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 430 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம். அதேநேரம் இந்த செடான் மாடலின் எஸ்580 வேரியண்ட்டில் இரட்டை-டர்போ வி8 என்ஜின் வழங்கப்படவுள்ளது.

2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இந்த என்ஜின் 470 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியது. இவை இரண்டுடனும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், தோற்றத்திலும் மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் மெருகேறியுள்ளது.

2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

நேர்த்தியான வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் கார், 3 கிடைமட்ட ஸ்லாட்களுடன் புதிய க்ரில், 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், தலைக்கீழான முக்கோண வடிவில் எல்இடி டெயில்லைட்கள், பிராண்டின் லேட்டஸ்ட் எம்பக்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் ஏற்றுள்ளது.

2021 எஸ்-க்ளாஸ் செடானின் மீதான ஆவலை அதிகரிக்கும் மெர்சிடிஸ்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

லேட்டஸ்ட் எம்பக்ஸ் சிஸ்டம் மட்டுமின்றி, 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மாத்திரை வடிவில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஃபைபர் ஆப்டிக் லைட்டிங் மற்றும் பளபளப்பு குறைக்கப்பட்ட உலோக உள்ளீடுகளுடன் இந்த 2021 செடான் காரின் உட்புற கேபினை சுற்றிலும் கவர்ச்சிக்கரமான விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
New Mercedes-Benz S-Class teased ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X