தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

புதிய (2022) மேபேக் எஸ்680 அல்ட்ரா-லக்சரி செடான் காரின் படங்களை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

படங்களை தவிர்த்து இந்த புதிய பேமேக் காரை பற்றிய எந்த விபரத்தையும் மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிடவில்லை. மேலும் இந்த படங்களிலும் காரின் வெளிப்புற தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றத்தை காண முடியவில்லை.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

முந்தைய தலைமுறை காரின் தோற்றத்தை தான் பெரும்பான்மையாக இந்த புதிய தலைமுறையும் பெற்றுள்ளது. இந்த வகையில் ப்ரீமியம் தரத்திலான இரட்டை-நிற பெயிண்ட் மற்றும் பெரிய மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் 2022 மெர்சிடிஸ்-மேபேக் எஸ்680 காரிலும் தொடரப்பட்டுள்ளன.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

லக்சரி கார் என்பதை நியாயப்படுத்தும் விதத்தில் க்ரோம் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய மேபேக் எஸ்680 காரின் உட்புறம் முழுவதும் தொழிற்நுட்ப அம்சங்களால் நிரப்பப்பட்டுள்ளது.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

ஏகப்பட்ட ஓட்டுனர் உதவி அம்சங்களை பெற்றுள்ள இந்த லக்சரி செடான் காரில் ப்ரீமியம் மற்றும் லக்சரி தரம் உட்புறத்தில் மேலும் உயர்ந்துள்ளது. 2022 மெர்சிடிஸ்-மேபேக் எஸ்680 செடான் காரில் 6.0 லிட்டர் இரட்டை-டர்போ வி12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

எஸ்650 மாடலில் பொருத்தப்படும் என்ஜினின் அப்டேட் வெர்சனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 630 பிஎச்பி மற்றும் 1000 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

ஆனால் இந்த என்ஜின் புதிய எஸ்680 காரில் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது வெளியிடப்படவில்லை. இந்தியாவிலும் மிக அதிக விலை கொண்ட மெர்சிடிஸின் மேபேக் சொகுசு கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தயாராகும் அடுத்த லக்சரி மெர்சிடிஸ்-மேபேக் கார் இதுதானாம்!! எஸ்680 செடான்...

இந்த வகையில் எஸ்560 மற்றும் எஸ்650 என்ற இரு மேபேக் கார்களும் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன. இவற்றின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.2.23 கோடி மற்றும் ரூ.2.78 கோடி என்ற அளவில் உள்ளன.

Most Read Articles

English summary
2022 Mercedes-Maybach S 680 luxury sedan unveiled (Mercedes-Maybach S-Class).
Story first published: Sunday, May 16, 2021, 21:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X