மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

இக்யூஎஸ் எலக்ட்ரிக் செடான் காரின் தயாரிப்பு பணிகளை மெர்சிடிஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. டெஸ்லாவின் மாடல் எஸ் காருக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

இக்யூஎஸ் எலக்ட்ரிக் செடானின் தயாரிப்பு பணிகள் ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸின் தொழிற்சாலை 56ல் துவங்கப்பட்டுள்ளன. இந்த லக்சரி எலக்ட்ரிக் செடான் கார் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டது.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

இந்த எலக்ட்ரிக் காரில் மிக முக்கிய அம்சமாக "ஹைப்பர் திரை" தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் டேஸ்போர்டு முழுவதும் திரைகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஸ்டேரிங் சக்கரம் காரின் பின் சக்கரங்களை இயக்கும்.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

மெர்சிடிஸின் தயாரிப்பு மேலாண்மை மற்றும் தயாரிப்பு பணிகள் முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு மாறிவருகின்றன. இதன்படி இக்யூஎஸ் மாடலின் தயாரிப்பிற்கு எம்ஒ360 டிஜிட்டல் ஈக்கோ சிஸ்டம் அடிப்படையை உருவாக்கியுள்ளது.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

மெர்சிடிஸ் இக்யூஎஸ் காரில் 107.8 kWh மற்றும் 90 kWh என்ற இரு விதமான ஆற்றல்திறன்களில் பேட்டரி தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. அதேபோல் இந்த எலக்ட்ரிக் கார் 333 எச்பி உடன் இக்யூஎஸ் 450 மற்றும் 523 எச்பி மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் உடன் இக்யூஎஸ் 580 4மேட்டிக் என்ற இரு வேரியண்ட் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

700கிமீ ரேஞ்ச் உடன் உருவாக்கப்படும் இந்த மெர்சிடிஸ் எலக்ட்ரிக் காருக்கு டெஸ்லாவின் மாடல் எஸ் முக்கிய போட்டி மாடலாக விளங்கும். இக்யூஎஸ் காரில் 22 கிலோவாட்ஸ் மற்றும் 11 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜிங் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

இவற்றுடன் டிசி விரைவு சார்ஜிங் வசதியை வழங்கவும் மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. 200 கிலோ வாட்ஸ் வரையில் ஆற்றலை வழங்கக்கூடிய டிசி சார்ஜர் 10%-இல் இருந்து 80% சதவீதம் வரையிலான ஆற்றலை வெறும் 31 நிமிடங்களில் நிரப்பிவிடும்.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

இவ்வாறு 15 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் சுமார் 300கிமீ வரையில் ஓட்ட முடியும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது. 100kmph வேகத்தை இக்யூஎஸ் மாடலின் 450 வேரியண்ட்டில் 6.2 வினாடிகளிலும், 580 4மேட்டிக் வேரியண்ட்டில் சற்று விரைவாக 4.3 வினாடிகளிலும் எட்டிவிட முடியுமாம். மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 210kmph ஆகும்.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கின!! ஜெர்மனியில் தயாராகிறது...

இக்யூஎஸ் மட்டுமில்லாமல் மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் கார்களும் தயாரிக்கப்பட்டுவரும் மெர்சிடிஸ் ஜெர்மனி தொழிற்சாலையில் 1,500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த தொழிற்சாலை இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரின் தயாரிப்பிற்கு என்றே தனியாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes EQS electric sedan enters production, more details revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X