ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்

இந்திய சந்தைக்கான 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 19ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரினை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

பெரிய எதிர்பார்ப்பிற்கு ஒரு முடிவாக மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் ஏஎம்ஜி ஏ45 எஸ் காரை சந்தையில் வெளியீடு செய்துள்ளது. தற்போதைக்கு இந்த ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்தியாவிற்கான செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் மாடலாக விளங்கும் இது, சிபியூ முறையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

அதாவது, இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார் முழுவதுமாக ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. நம் நாட்டில் மெர்சிடிஸின் ஏ-கிளாஸ் வரிசையில் ஏ-கிளாஸ் லிமௌசைன், ஜிஎல்ஏ, ஏஎம்ஜி ஏ35 4மேட்டிக் மற்றும் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 4மேட்டிக் மாடல்களுடன் இணைந்துள்ள புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ், மெர்சிடிஸின் மற்றொரு ஏஎம்ஜி மாடலாகவும் விளங்குகிறது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

ஏற்கனவே கூறியதுதான், தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த கார், வருகிற நவ.19அம் தேதியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், பனமெரிகானா க்ரில், பொனெட்டில் இரு கூர்மையான லைன்கள், நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் அளவில் பெரியதாக ஏர் டேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பிளிட்டரை புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் முன்பக்கத்தில் கொண்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

இதன் 19 இன்ச் அலாய் சக்கரங்களில் குறை-அளவிலான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியே பின்பக்கத்திற்கு சென்றால், கவர்ச்சிக்கரமான டிஃப்யூஸர் மற்றும் நான்கு-முனை எக்ஸாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்போர்டியான தோற்றத்திற்காக இந்த ஏஎம்ஜி காரில் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வெளிப்பக்கத்திற்கு ஏற்ப உட்புற கேபினும் ஸ்போர்டியானதாக, எவர் ஒருவரையும் கவரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

வெளிப்புறத்திற்கு இணையாக உட்புறத்திலும் மெர்சிடிஸின் ஏஎம்ஜி தொடுதல்களை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்த வகையில் புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் காரின் உள்ளே, கையால் தையப்பட்ட லெதர் மற்றும் டைனாமிகா மைக்ரோஃபைபர் உடன் கருப்பு நிறத்தில் பக்கெட்-ஸ்டைல் ஸ்போர்ட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஏஎம்ஜி செயலாக்க ஸ்டேரிங் சக்கரமும் நப்பா லெதர்/ டைனாமிகா மைக்ரோஃபைபரால் மூடப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

பொத்தான்கள் மற்றும் ஏஎம்ஜி லோகோவை கொண்டுள்ள இந்த ஏஎம்ஜி ஸ்டேரிங் சக்கரத்தில் மஞ்சள் நிற தையல்களையும் காண முடிகிறது. இவை போதாது என்போர்க்காக, டிசைனோ ப்ளாட்ஃபாரத்தின் கீழ் புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் காரினை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட தனிப்பயனாக்க தேர்வுகளையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

டேஸ்போர்டில் ஒரே யூனிட்டாக, இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான திரையினை தொடுதல் மூலமாகவோ, அல்லது மைய கன்சோலில் வழங்கப்பட்டுள்ள ட்ராக்-பேட் மூலமாகவோ, அல்லது ஸ்டேரிங் சக்கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்கள் மூலமாகவோ அல்லது மிகவும் எளிமையான ‘ஹே மெர்சிடிஸ்' என்ற குரல் கட்டளையின் மூலமாகவோ கண்ட்ரோல் செய்யலாம்.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான திரையினை கிளாசிக், ஸ்போர்ட் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ஸ்டைலில் ஏதேனும் ஒன்றில் வாடிக்கையாளர் பெறலாம். இந்த புதிய ஏஎம்ஜி கார் பிரீமியம் தரத்திலான பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டத்தையும் பெற்று வந்துள்ளது. இந்த ஏஎம்ஜி ஏ45 எஸ் காரில் கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+, ஸ்லிப்பரி, இண்டிவிட்யூவல் மற்றும் ரேஸ் என்ற 6 ட்ரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

இவற்றுடன் ஹெட்ஸ்-அப் திரை, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை காட்டும் உதவி மற்றும் சாலையில் ஒரே பாதையை தொடர உதவும் வசதி போன்றவையும் இந்த புதிய ஏஎம்ஜி காரில் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு, தற்போதைக்கு உலகின் ஆற்றல்மிக்க டர்போசார்ஜ்டு என்ஜின்களுள் ஒன்றாக விளங்கும் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ என்ஜின் புதிய ஏஎம்ஜி ஏ45 எஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 416 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது வழக்கமான மெர்சிடிஸ் ஏ45 காரின் என்ஜினுடன் ஒப்பிடுகையில் 30 பிஎச்பி-யும், ஏ35 செடான் உடன் ஒப்பிடுகையில் சுமார் 114 பிஎச்பி-யும் அதிகமாகும். இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் கார் வெளியீடு!! இன்னும் 2 நாட்களில் விற்பனை ஆரம்பம்!

இது 4மேட்டிக் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பின் வாயிலாக என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரின் டாப்-ஸ்பீடு 270kmph ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்பட உள்ளன.

Most Read Articles

English summary
2021 Mercedes-AMG A 45 S Unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X