Exclusive: எங்கள் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி உடைய MG Astor! Creta-க்கு செம்ம போட்டி இருக்கு!

ADAS தன்னாட்சி இரண்டாம் நிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் MG Astor கார் மலை பகுதியில் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கியது. இதுகுறித்த மேலும் விரிவான தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

குட்டி ரோபோ என கூறுமளவிற்கு அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் MG Astor கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியை இக்காரில் வழங்க இருக்கின்றது MG.இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக பல்வேறு செயல்களை நம்மால் தானாகவே பெற முடியும்.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

குறிப்பாக, செய்தியை வாசித்தல், முடிவில்லா ஜோக்குகளை பெறுதல், உரையாடல், மனிதர்களைப் போன்ற பாவனைகள், விக்கிப்பீடியா பற்றி அறிதல், நேவேகிஷன், இசை, கார்குறித்த வார்னிங்குகளை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக பெற முடியும்.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

இத்துடன், தன்னாட்சி இரண்டாம் நிலை தொழில்நுட்பமும் Astor இல் இடம் பெற இருக்கின்றது. இதன் வாயிலாக, அடாப்டீல் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி பிரேக்கிங், பாதசாரிகள் குறுக்கே வந்தால் எச்சரிக்கும் வசதி மற்றும் பிரேக்கினை வழங்கும் அம்சம், நேர்கோட்டு பாதையில் தானாக காரை இயக்கும் வசதி, கண்ணுக்கு புலப்படாத இடங்கள் பற்றிய அறிய உதவும் வசதி என எக்கசக்க வசதிகளை பெற முடியும்.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட காரையே Astor காரையே இந்தியாவில் MG மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை முன்னிட்டு இக்காரை தீவிர சாலை பரிசோதனையோட்டத்தில் நிறுவனம் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு, இந்தியாவின் கரடு, முரடான மலை பாதையில் வைத்து Astor கார்கள் சில பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எங்களின் கண்களில் சிக்கியது.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

இதன் வாயிலாக சில முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டபோது இந்த காரில் என்ன மாதிரியான க்ரில் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருந்ததோ அதே க்ரில் அமைப்பே தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் கார் மாடல்களிலும் இடம் பிடித்துள்ளன.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

தொடர்ந்து, காரின் பக்கவாட்டு பகுதியை கவர்ச்சியானதாக காட்டும் வகையில் ஐந்து ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் இன்டிகேட்டர் வசதியுடன் கூடிய பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் காரின் பக்கவாட்டு பகுதிக்குக் கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

இக்காரின் மேற்கூரை பகுதியில் ரெயில்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது காரின் கவர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக MG ZS EV இருக்கின்றது. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனே தற்போதையே Astor ஆகும்.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

ஆகையால், ஸ்டைலில் இரு கார்களும் பெருமளவில் ஒரே மாதிரியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் ஸ்பை படங்கள் அமைந்துள்ளன. அதேவேலையில், வெளிப்புற தோற்றத்தில் லேசான மாற்றங்களையும் இப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

அந்தவகையில், சார்ஜிங் பாயிண்டிற்கு பதிலாக எரிபொருள் நிரப்புவதற்கான வாய் பகுதி இடம் பெற்றிருப்பதை இக்காரில் நம்மால் காண முடிகின்றது. ஆனால், இந்த வாய் பகுதி காரின் பக்கவாட்டு பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. அதேசமயம், MG ZS EV எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் செய்வதற்கான வாய் பகுதி, முன் பக்கத்தில் லோகோவிற்கு பின்னால் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

இதேபோல் Astor உட்பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், புதிய நிறம் மற்றும் புதிய தொழில்நுட்பம் சேர்ப்பு வேலைகள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறமாக பழுப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வட்ட வடிவ ஏசி உட்பகுதியின் இரு முனைகளிலும் இடம் பெற்றிருக்கின்றன.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

அதேசமயம், இதன் டேஷ்போர்டு மிகவும் எளிமையான முறையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மையப்பகுதியில் இடம் பெற்றிருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் ஸ்பை படங்கள் காட்டுகின்றன. MG நிறுவனம் இக்காரை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Exclusive: எங்களின் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி கொண்ட MG Astor... Creta-விற்கு செம்ம போட்டி இருக்கு!

அந்தவகையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் அது எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றுடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான Hyundai Creta-விற்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Most Read Articles
English summary
Mg aster spied while testing here is full details
Story first published: Saturday, August 28, 2021, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X