க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காரை இந்த 2021ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் புதிய எஸ்யூவி கார் மாடல் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் குஜராத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த கார் எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி காரின் பெட்ரோல் வெர்சனாக இருக்கலாம். மேலும் இந்த எஸ்யூவி கார் எம்ஜி ஆஸ்டர் என்ற பெயரில் அழைக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

அட்வான்ஸ்டு ட்ரைவர் உதவி சிஸ்டத்துடன் அறிமுகமாகும் முதல் எம்ஜி காராக ஆஸ்டர் எஸ்யூவி இருக்கலாம் என முன்பு தெரிவித்திருந்தோம். இதற்கிடையில் தற்போது இந்த எஸ்யூவி காரில் பொருத்தப்பட உள்ள அவசரகால ப்ரேக்குகளை சோதிப்பதற்காக இந்த சோதனை ஓட்டத்தை எம்ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் ரிஷப் ஜெயின்என்பவரது முகப்புத்தக்கத்தின்மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

இதன் மூலம் தானியங்கி அவசரகால ப்ரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் அமைப்பு, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், வாகனம் பாதை மாறுவது & முன்பக்கமாக வாகனம் மோதப்பட உள்ளதை எச்சரிக்கும் அமைப்புகள் மற்றும் கை சைகை இல்லாமல் பார்க்கிங் செய்வது போன்ற ஆக்டிவ் ஓட்டுனர் உதவி வசதிகளை இந்த எஸ்யூவி கார் பெற்றுவரவுள்ளதை அறிய முடிகிறது.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

வரும் தீபாவளியின் போது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எம்ஜி ஆஸ்டர் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் மற்றும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்டவுள்ள ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ளது.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

பெட்ரோல் வெர்சனில் மட்டும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் ஆஸ்டர் விற்பனையை துவங்கலாம்.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

இதில் முதல் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனையும், இரண்டாவது பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

ஆனால் க்ரெட்டாவின் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 138 பிஎச்பி பவரை தான் வெளிப்படுத்துவது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்த இரு என்ஜின்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

க்ரெட்டாவிற்கு போட்டியாக எம்ஜி கொண்டுவரும் எஸ்யூவி காரில் இத்தனை வசதிகளா? தீபாவளியில் அறிமுகமாகிறது...

4.3 மீட்டர் நீளத்தில், 1.8 மீட்டர் அகலத்தில் மற்றும் 1.6 மீட்டருக்கு அதிகமான உயரத்திலும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த எம்ஜி எஸ்யூவி காரின் வீல்பேஸை கிட்டத்தட்ட 2.6 மீட்டர் நீளத்திலும், க்ரவுண்ட் கிளியரென்ஸை 205மிமீ-லும் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
MG Astor Caught Doing Emergency Brake Test, Launch Soon. Read In Tamil.
Story first published: Thursday, March 25, 2021, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X