பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

இந்திய சந்தையில் அடுத்ததாக புதிய எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய எஸ்யூவி எம்ஜி இஸட்எஸ் அடிப்படையிலான பெட்ரோல் மாடல் ஆகும். அஸ்டர் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி அழைக்கப்படவுள்ளது.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக அஸ்டர் எஸ்யூவியை எம்ஜி மோட்டார் நிறுவனம் தீவிரமாக சாலை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. இதன் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் எம்ஜி அஸ்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்களை நமது வாசகர் சச்சின் தேவ் தற்போது பகிர்ந்துள்ளார்.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

பெங்களூரில் சோதனை செய்யப்படும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முழுவதும் உருமறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டதால், இந்த காரை பற்றி பெரிய அளவில் எந்த தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் டெயில்லேம்ப்களும், விண்டோ லைனும் இது எம்ஜி நிறுவனத்தில் இருந்து வரவுள்ள எஸ்யூவி என்பதை உறுதிபடுத்துகின்றன.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி இந்திய சந்தையில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி காராக அஸ்டர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் பேஸ் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய்க்கும் (எக்ஸ் ஷோரூம்) குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் ஏற்கனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது. எனவே அஸ்டர் என்ற புதிய பெயரை வழங்குவதன் மூலம், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவிக்கு தனி அடையாளத்தை கொடுக்க முடியும். இந்த எஸ்யூவி ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எம்ஜி இஸட்எஸ் காரில், 1.5 லிட்டர் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் ஆகிய இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள மாடல் பெரிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

இதில், 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. அதே நேரத்தில் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும் மற்றும் 230 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது.

பெங்களூரில் சோதனை... விற்பனைக்கு வருவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியது எம்ஜி அஸ்டர்

இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகளும் இடம்பெற்றிருக்கும் என நம்பலாம். அஸ்டர் காரின் அறிமுகம் குறித்த தகவல்களை எம்ஜி நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
MG Astor SUV Spotted Testing In Bangalore: Here Are The Details. Read in Tamil
Story first published: Thursday, April 8, 2021, 9:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X