அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய எம்ஜி அஸ்டர் கார், நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி அஸ்டர் கார் நாளை (அக்டோபர் 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை, எம்ஜி டீலர்ஷிப்கள் ஏற்கனவே ஏற்று கொண்டு வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

எம்ஜி அஸ்டர் கார் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இதில், 110 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் எஸ்டிடி, ஸ்மார்ட், ஷார்ப் எஸ்டிடி, ஷார்ப், ஷேவி மற்றும் ஷேவி ரெட் என மொத்தம் 8 வேரியண்ட்களில் எம்ஜி அஸ்டர் கார் கிடைக்கும். எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காரில் தொழில்நுட்ப வசதிகளில் தலைசிறந்து விளங்கும். போட்டியாளர்களை வலுவாக எதிர்கொள்வதற்காக மிக சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை அஸ்டர் காரில் எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

இதன்படி எம்ஜி அஸ்டர் காரில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய் ஸ் அஸிஸ்டண்ட், ஜியோ இ-சிம் கனெக்டிவிட்டி, லேட்டஸ்ட் ஐஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் டிபார்சர் வார்னிங், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி பெற்றுள்ளது.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

அத்துடன் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், 7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகளும் எம்ஜி அஸ்டர் காரில் வழங்கப்படுகின்றன.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

இதுதவிர பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு மற்றும் டெசண்ட் கண்ட்ரோல், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா என போதும் போதும் என சொல்லுமளவிற்கு அஸ்டர் காரில் மேலும் பல வசதிகளையும் எம்ஜி நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

எம்ஜி அஸ்டர் காரின் நீளம் 4,323 மிமீ ஆகும். அதே சமயம் இந்த காரின் அகலம் 1,809 மிமீ ஆகவும், உயரம் 1,650 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,585 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் எம்ஜி அஸ்டர் கார், ஸ்பைஸ்டு ஆரஞ்ச், அரோரா சில்வர், கிளாஸ் ரெட், ஸ்டேரி பிளாக் மற்றும் கேண்டி ஒயிட் என மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

எம்ஜி அஸ்டர் காரின் ஆரம்ப விலை 10 அல்லது 11 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையை நிர்ணயம் செய்தால், அது மிகவும் சவாலான விலை நிர்ணயமாக இருக்கும். மேலும் இந்த விலையில் வந்தால், எம்ஜி நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் அஸ்டர் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

ஆனால் அதிகாரப்பூர்வ விலையை தெரிந்து கொள்வதற்கு நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும். இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்களுடன், புத்தம் புதிய எம்ஜி அஸ்டர் கார் போட்டியிடும். இந்த செக்மெண்ட்டில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள்தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அப்போ புக் பண்ணீரலாம்... இவ்வளவு குறைவான விலையில் வரப்போகிறதா MG Astor கார்? பதற்றத்தில் போட்டி நிறுவனங்கள்!

இந்த இரண்டு கார்களுக்கும் எம்ஜி அஸ்டர் பெரும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்டர் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்கள் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், இவற்றை காட்டிலும் சிறப்பானதொரு வரவேற்பு அஸ்டர் காருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mg astor suv to launch in india tomorrow heres everything you need to know
Story first published: Sunday, October 10, 2021, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X