MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

எம்ஜி அஸ்டர் MG Astor காரின் எந்தெந்த வேரியண்டில் என்னென்ன சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் விரிவாக வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார் தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இக்காரின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு நீடித்து வந்த நிலையில் நேற்றைய (அக்டோபர் 11) தினம் அஸ்டர் விற்பனைக்கு அறிமுகமானது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 9.78 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

மிட் சைஸ் எஸ்யூவி ரக காரான இதில் பன்முக தொழில்நுட்ப வசதிகள் நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. எனவேதான், இதன் வருகையை எதிர்நோக்கி இந்தியர்கள் காத்துக் கிடந்தனர். ஒவ்வொரு வேரியண்டிலும் மிகவும் தனித்துவமான வசதிகளை நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், என்னென்ன வேரியண்டில் என்னென் வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலையே மிகவும் விரிவாக இப்பதிவில் வழங்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

எம்ஜி அஸ்டர் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு வசதிக் கொண்ட வாகனமாகும். இதுமட்டுமின்றி, டிரைவர் அசிஸ்ட் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் மிக ஏராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் எம்ஜி அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்டைல் (Style), சூப்பர் (Super), ஸ்மார்ட் (Smart) மற்றும் ஷார்ப் (Sharp) ஆகிய தேர்வுகளிலேயே அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்:

ஸ்டைல்:

ஸ்டைல் மிகவும் குறைவான வசதிகள் கொண்ட ஆரம்ப நிலை தேர்வாக ஸ்டைல் இருக்கின்றது. இதில் உள்ள அம்சங்களின் பட்டியல் இதோ:

  • 3 மோட்கள் கொண்ட எலெக்ட்ரானிக் பவர் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் - Electronic power steering with 3 modes
  • லெதர் போர்த்தப்பட்ட டோஷ்போர்டு, கதவின் ட்ரிம், ஆர்ம் ரெஸ்ட் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றிலும் லெதர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன - Leather layering on dashboard, door trim, door armrest, center console
  • ஹில் டெஸன்ட் கன்ட்ரோல் - Hill Descent Control
  • பருந்தின் கண் போன்ற முழு எல்இடி தர முகப்பு மின் விளக்கு - Full LED Hawkeye head lights
  • தானியங்கி ஏசி பிஎம்2.5 ஃபில்டர் வசதி உடன் - Auto AC with PM2.5 filter
  • சாவியில்லா நுழைவு (சாவியை மடித்து வைத்துக் கொள்ள முடியும்) - Remote keyless entry + foldable key
  • பின் பக்கத்தில் டிஃபாக்கர் மற்றும் பனி மின் விளக்கு - Rear defogger & fog lamp
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம் - Electronic Stability Program (ESP)
  • 25.7 செமீ எச்டி தொடுதிரை இன்போடெயின்மென்ட் - 25.7 cm HD touchscreen infotainment
  • எல்இடி பகல்நேர மின் விளக்கு - LED daytime running lights
  • MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

    சூப்பர்:

    • ஆர்17 சில்வர் நிற அலாய் வீல் - R17 silver alloy wheels
    • ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா - Reverse parking camera
    • எல்இடி வால் பகுதி மின் விளக்கு - LED tail lamps
    • சேடின் சில்வர் நிற ரூஃப் ரெயில்கள் - Satin silver finish roof rails
    • முன் பக்கத்தில் பனி மின் விளக்கு கார்னரிங் அசிஸ்ட் வசதி உடன் - Front fog lamp with cornering assist
    • எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், தானாகவே பிடிக்கும் வசதி கொண்டது - Electric parking brake with autohold (automatic)
    • எல்இடி உட்பக்க மின் விளக்குகள் - LED interior lamp
    • 25.7 செமீ எச்டி தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் - 25.7 cm HD touchscreen infotainment
    • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே (4 ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர் வசதி உடன்) Android Auto & Apple CarPlay speakers + Tweeters (4)
    • ஆடியோ கன்ட்ரோல் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் - Steering mounted audio controls
    • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம் - Electronic Stability Program (ESP)
    • கழுகின் கண்கள் போன்ற முழு எல்இடி முகப்பு மின் விளக்கு - Full LED Hawkeye headlamps
    • எல்இடி பகல்நேர மின் விளக்கு - LED daytime running lights
    • MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

      ஸ்மார்ட்:

      • தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு வசதிக் கொண்ட அசிஸ்டன்ட் வசதி - Personal AI Assistant
      • ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் கார் சாவி - Digital car key using Bluetooth technology
      • வெப்பம் வசதிக் கொண்ட ஓஆர்விஎம் - Heated ORVM
      • ஐஸ்மார்ட் - iSmart (80+ features)
      • 17.78 செமீ முழு டிஜிட்டல் க்ளஸ்டர் - 17.78 cm full digital cluster
      • புஷ் பட்டன் எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி - Push button engine start/stop with smart entry
      • பக்கவாட்டு பகுதியில் ஏர் பேக் - Side airbag
      • லெதர் இருக்கை - Perforated leather seat upholstery
      • க்ரூஸ் கன்ட்ரோல் - Cruise control
      • தானியங்கி மின் விளக்கு - Auto headlamps
      • டிபிஎம்எஸ் - TPMS
      • ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் மேனுவல் மோட் - Speed assist system manual mode
      • வெளிப்பக்க கண்ணாடிகளை பவரால் மடித்துக் கொள்ளும் வசதி - Outside mirror power foldable
      • பிரிட் டைனமிக் எக்ஸ்டீரியர் ஸ்போர்டி கருப்பு நிற தீம் - Brit dynamic exterior sporty black theme
      • டக்ஸடோ கருப்பு நிற உட்பகுதி - Tuxedo black interior theme
      • MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

        ஷார்ப்:

        தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு வசதி உடைய அசிஸ்டன்ட் வசதி - Personal AI Assistant

        ட்யூவல் பேன் பனோரமிக் சன்ரூஃப் - Dual pane panoramic sunroof

        ரியர் டிரைவ் அசிஸ்ட் - Rear drive assist (RDA)

        முன் மற்றும் பின் பக்கத்தில் சிவப்பு நிற காலிபர்கள் - Red brake callipers - Front and rear

        ஆர்17 டர்பைன் இன்ஸ்பையர்டு அலாய்கள் - R17 turbine inspired alloys

        ஆர்17 ட்யூவல் டோன் மெஷின் அலாய்கள் - R17 dual tone machine alloys

        கர்டைன் ஏர் பேக் - Curtain airbag

        360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா - 360 around view camera

        ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை - 6 way power adjustable driver seat

        மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர் - Rain sensing wipers

        பிளைண்ட் ஸ்பாட்டை கண்டறியும் வசதி - Blind spot detection (BSD)

        பாதை மாற்றத்தை அசிஸ்ட் செய்யும் வசதி - Lane change assist (LCA)

        ரியர் க்ராஸ் டிராஃபிக் அலர்ட் - Rear cross traffic alert (RCTA)

        MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

        மேலே பார்த்தவையே ஒவ்வொரு வேரியண்டிலும் இடம் பெற்றிருக்கும் தனித்துவமான அம்சங்களின் விபரம் ஆகும். 49 வரையிலான அம்சங்கள் எஸ்யூவி அஸ்டர் காரில் வழங்கப்படுகின்றது. இதில், 27 அம்சங்கள் வரை அனைத்து அஸ்டர் வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியானதாக இடம் பெற்றிருக்கும். சில வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறுபட்டு காணப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

        MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

        கூடுதல் சிறப்பு தேர்வாக அஸ்டர் காரின் இருக்கைகளில் மூன்று விதமான நிற தேர்வு வழங்கப்படுகின்றது. இத்துடன் இரு விதமான எஞ்ஜின் தேர்வும் அஸ்டரில் வழங்கப்படுகின்றது. இரண்டுமே பெட்ரோல் எஞ்ஜின் மட்டுமே ஆகும். 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளில் அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

        MG Astorஇன் எந்த வேரியண்டில் செயற்கை நுண்ணறிவு வசதி கொடுக்கப்பட்டுள்ளது? வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

        இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 110பிஎஸ் மற்றும் 144 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 140 பிஎஸ் மற்றும் 220 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலே குறிப்பிட்டதைப் போல ரூ. 9.78 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வு ரூ. 16.78 லட்சம் வரையிலான விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Most Read Articles
English summary
Mg astor variant wise features details explained here
Story first published: Tuesday, October 12, 2021, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X