MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

எம்ஜி (MG) நிறுவனம் அதன் அஸ்டர் (Astor) காருக்காக ஓர் சிறப்பு சந்தா திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

எம்ஜி (MG) மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் குறிப்பிட்ட ஓர் கார் மாடலுக்காக புதிய திட்டம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. சிஏஏபி (Car-as-a-Platform) எனும் திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் பன்முக சிறப்பு சேவையை வழங்குவதற்கான மாத சந்தா திட்டம் ஆகும்.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

காருக்காக, கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இதுமாதிரியான சேவையை இந்தியாவில் தொடங்குவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த திட்டம் இந்திய கார் பிரியர்கள் மத்தியில் கவனத்தைப் பெற தொடங்கியிருக்கின்றது. அஸ்டர் (Astor) எஸ்யூவி இதுவரை எந்தவொரு காரும் பெறாத அல்ட்ரா மாடர்ன் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

இதனை மேலும் சிறப்பாக்கும் வகையிலேயே சிஏஏபி சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்திட்டம், பொழுதுபோக்கு, பாதுகாப்பு, கட்டணத்தைச் செலுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள உதவும். இதற்காக எம்ஜி நிறுவனம் பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ உடன் அண்மையில் கூட்டணியைத் தொடங்கியது.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

ஜியோ இ-சிம் வாயிலாக காரில் அதி-வேக இணைய வசதியை வழங்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல செல்போன் செயலி நிறுவனங்களுடனும் எம்ஜி கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. மிக சிறந்த பயன்பாட்டை வழங்கும் வகையில் நிறுவனம் கூட்டணிகளை மேற்கொண்டிருக்கின்றது.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

அந்தவகையில், அளவில்லா இசையைக் கேட்டு ரசிக்கும் வகையில் ஜியோ சாவ்ன் ஆப்புடன் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த ஆப்பில் இந்தியாவின் பல மொழி பாடல்களைக் கேட்டு ரசிக்க முடியும். ஆங்கில பாடல்களையும் இதன் வாயிலாக கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், மாதத்திற்கு 4 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது. இது தங்களுக்கு போதாது என கருதும் வாடிக்கையாளர்கள் 9 ஜிபி அல்லது 14 ஜிபி டேட்டாவை கூடுதல் கட்டணத்துடன் பெற்றுக் கொள்ள முடியும்.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

இத்துடன், மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக பார்க்-ப்ளஸ் (Park+) உடனும் எம்ஜி கூட்டணி வைத்திருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் உள்ள பார்க்கிங் நிறுவனங்களுடன் இந்த ஆப் இணைந்து செயல்படுகின்றது. ஆகையால், இந்த ஆப் வாயிலாக பார்க்கிங் இடத்தை புக் செய்தல் மற்றும் பார்க்கிங்கிற்கான கட்டணத்தைச் செலுத்துதல் ஆகியவற்றை சுலபமாக மேற்கொள்ளலாம்.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

இன்னும் கூடுதல் சிறப்பு அனுபவத்தை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு கோய்னேஆர்த் (KoineArth) உடனும் எம்ஜி கூட்டு வைத்திருக்கின்றது. இது இந்தியாவின் முதல் வாகனங்களுக்கான டிஜிட்டல் பாஸ்போர்ட் ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களின் பாஸ்போர்ட்டை டிஜிட்டலாக பகிர இது உதவும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை வழங்கவே சிஏஏபி சந்தா திட்டத்தை எம்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

இந்த வசதி நிறுவனத்தின் அஸ்டர் எஸ்யூவி காருக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான ஓர் சேவையை எந்தவொரு கார் பிராண்டும் இதுவரை இந்தியாவில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி அஸ்டர் கடந்த அக்டோபர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகமானது. ரூ. 9.78 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பிரிவின்-முதல் தானியங்கி (நிலை-2) தொழில்நுட்பம் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இது அளவில்லா ஜோக், இசை மற்றும் தானியங்கி பாதுகாப்பு வசதிகளை வழங்கக் கூடியது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு விதமான வேரியண்ட்களில் புதிய எம்ஜி அஸ்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

MG Astor காருக்கு இப்படி ஒரு திட்டமா? இதுவரை எந்த நிறுவனமும் அறிவிக்காத சிறப்பு சந்தா திட்டம்!

எம்ஜி அஸ்டர் காரின் வேரியண்ட் வாரியான விலை விபரம்:

Style Super Smart Sharp
VTi - Tech MT ₹ 9,78,000 ₹ 11,28,000 ₹ 12,98,000 ₹ 13,95,000
VTi - Tech CVT ₹ 12,68,000 ₹ 14,18,000 ₹ 14,98,000
220 Turbo AT ₹ 15,88,000 ₹ 16,78,000
Most Read Articles
English summary
Mg brings an industry first services under car as a platform for astor
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X