800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

அதிசெயல்திறன் மிக்க பேட்டரி மற்றும் மின் மோட்டார் கொண்ட புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மாடலை எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காரின் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

எம்ஜி சைபர்ஸ்டெர் என்ற பெயரில் இந்த புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. 1960களில் வந்த எம்ஜிபி ரோட்ஸ்டெர் காரின் டிசைன் அம்சங்கள் இந்த நவநாகரீகமான புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திறந்த கூரை அமைப்புடைய ரோட்ஸ்டெர் வகையிலான மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

புதிய எம்ஜி சைபர்ஸ்டெர் கான்செப்ட் மாலானது லண்டனில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் இரண்டு கதவுகள் கொண்ட மின்சார ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

சுண்டி இழுக்கும் தோற்றத்தில் இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், Magic Eye என்ற டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் எல்இடி ஹெட்லைட் பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் அம்சமாக உள்ளது. இதன் முகப்பு மிகவும் வசீகரமாக உள்ளது.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

பக்கவாட்டில் எல்இடி விளக்கு பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை லேசர் பெல்ட் என்ற பெயரில் எம்ஜி மோட்டார் குறிப்பிடுகிறது. அதேபோன்று, இதன் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களின் டிசைன் இங்கிலாந்து தேசியக் கொடியை நினைவூட்டும் வகையில் மிகவும் அசத்தலாகவும், பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்திலும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

இந்த காரின் தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் குறித்து முழுமையானத் தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ரியர் வியூ மிரர்களுக்கு பதிலாக கேமரா, பெரிய அளவிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரேஸ் கார்களில் இருப்பது போன்ற ஸ்டீயரிங் வீல், டச் பேனல் மூலமாக கியர் மாற்றும் வசதி ஆகியவற்றுடன் இந்த கார் பெயருக்கு ஏற்றாற்போல் 5 ஜி இன்டர்நெட் தொழில்நுட்ப வசதியுடன் வர இருக்கிறது.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

மேலும், இந்த காரில் வழங்கப்படும் திறன் வாய்ந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 800 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 0 - 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

800 கிமீ ரேஞ்ச், பவர்ஃபுல் மோட்டார்... எம்ஜி நிறுவனத்தின் வேற லெவல் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் வெளியீடு!

புதிய எம்ஜி சைபர்ஸ்டெர் கார் இந்த மாத இறுதியில் ஷாங்காயில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில், சிறந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மாடலை எம்ஜி கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG has revealed all new Cyberster electric roadster car concept ahead of debut in Shanghai Motor Show.
Story first published: Saturday, April 10, 2021, 10:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X