பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா அசந்திருவீங்க!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG Motor) ஒரே நேரத்தில் பல நூறு அஸ்டர் (Astor) மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரை டெலிவரி கொடுத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எம்ஜி (MG Motor) நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகமாக அஸ்டர் (Astor) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் நடுத்தர அளவுள்ள எஸ்யூவி (Mid-Size SUV) ரக கார் மாடலாகும். இக்காருக்கான புக்கிங் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி அன்று தொடங்கியநிலையில், தற்போது காரை டெலிவரி செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நிலையில், ஒரே நாளில் சுமார் 500 யூனிட் அஸ்டர் எஸ்யூவி கார் மாடலை எம்ஜி கார் விற்பனையாளர் ஒருவர் டெலிவரி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் செமிகன்டக்டர் சிப் பற்றாக்குறை ஏற்பட்டு வரும்நிலையில், நிறுவனம் ஒரே நாளில் 500 யூனிட் அஸ்டர் காரை டெலிவரி கொடுத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உலகளவில் சிப் பற்றாக்குறை நிலவி வருவதனால் வாகன உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக உரிய நேரத்தில் புதிய வாகனங்களை புக் செய்தவர்களுக்கு உரிய வாகனங்களை டெலிவரி கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ஒரே நாளில் 500 யூனிட் அஸ்டர் எஸ்யூவி கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்திய வாகன உலகிற்கே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேநேரத்தில், உலகளவில் ஏற்பட்டு வரும் சிப் பற்றாக்குறை இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸைக் கூட விட்டுவைக்கவில்லை.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆறு மாதங்கள் வரை காத்திருப்பு காலமும், 2 மாதங்கள் வைர பிற வாகனங்களுக்கும் காத்திருப்பு காலம் இதன் விளைவாக உருவாகியுள்ளது. எனவேதான் இந்த பிரமாண்ட டெலிவரியை கண்டு இந்திய வாகன உலகமே வியந்து நிற்கின்றது.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எம்ஜி நிறுவனத்தின் இந்த அஸ்டர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது. இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிய இருபதே நிமிடத்தில் இந்த ஆண்டிற்கான அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் லாட்டாக 5 ஆயிரம் யூனிட்டுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவையனைத்தும்தான் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மிக அதிக சிறப்பு வசதிகளுடன் இந்தியாவை அலங்கரிக்கும் வகையில் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. எம்ஜி அஸ்டர் காரின் ஆரம்ப விலை 9.78 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.78 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கவர்ச்சிகரமான டிசைன், சக்தி வாய்ந்த எஞ்ஜின் தேர்வுகள் உடன் எம்ஜி அஸ்டர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 110 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 140 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே அஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்விலும், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். இத்துடன், இரு தரமான பிரீமியம் வசதிகளான அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இவற்றுடன், 10.1 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார் இணைப்பு தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் சாவி, மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள் ஆகியவையும் இக்காருக்கு வழங்கப்படும்.

பல நூறு Astor கார்களை ஒரே நேரத்தில் டெலிவரி கொடுத்த MG கார் விற்பனையாளர்! எத்தன யூனிட் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தொடர்ந்து, அதிக பாதுகாப்பான பயணத்திற்காக அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், ஹில் அசென்ட் / டெஸ்சென்ட் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Mg delivers more than 500 units astor suv in a single day
Story first published: Tuesday, November 2, 2021, 20:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X