எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஹெக்டர் மிட்-சைஸ் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலம் கடந்த 2019ம் ஆண்டின் மத்தியில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான காராக எம்ஜி ஹெக்டர் மாறியுள்ளது. எனினும் சந்தை போட்டி அதிகரித்து வருவதை மனதில் வைத்து, ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் இன்று (ஜனவரி 7) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் குறிப்பிடத்தகுந்த அளவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய 18 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலில் 17 இன்ச் வீல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் புதிய எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், கருப்பு-பழுப்பு வண்ண ட்யூயல் டோன் இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வென்டிலேட்டட் இருக்கைகளும், வயர்லெஸ் சார்ஜிங் பேடும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்னும் சில கூடுதல் வசதிகளையும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் ஃபேஸ்லிஃப்டிற்கு முந்தைய மாடலின் இன்ஜின் தேர்வுகள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. இதன்படி 143 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இதே இன்ஜினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனும் கிடைக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து இன்ஜின் தேர்வுகளுடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் ஆகிய கார்களின் டாப் வேரியண்ட்களுடன் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து போட்டியிடும். எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 12.89 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 18.32 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் தவிர ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலையும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலை ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக தற்போது அதன் 7 சீட்டர் வெர்ஷனையும் எம்ஜி மோட்டார் களமிறக்கியுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலின் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் நடுவரிசையில் பென்ச் வகை இருக்கை வழங்கப்பட்டுள்ளது. எனவே நடுவரிசை இருக்கைகளில் மூன்று பேர் சௌகரியமாக பயணம் செய்யலாம். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை 13.34 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டின் விலை 18.32 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் இன்ஜின் தேர்வுகள்தான் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய மாடல்கள் தவிர, ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் மாடலையும் எம்ஜி நிறுவனம் ரீ-லான்ச் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை 15.99 லட்ச ரூபாயாகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.12 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
MG Hector Facelift, Hector Plus 7-Seater Launched In India - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X