Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தி 50 ஆயிரம் என்ற மைல்கல் எண்ணிக்கையை கடந்துள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ஹெக்டர் எஸ்யூவிதான் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே, எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு ஹெக்டர் எஸ்யூவி சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் வலுவான அடித்தளத்தை அமைத்து கொள்வதற்கு ஹெக்டர் எஸ்யூவிதான் உதவி செய்துள்ளது. தற்போது அதன் உற்பத்தியில் புதிய மைல்கல்லை எம்ஜி மோட்டார் கடந்துள்ளது.

ஐம்பதாயிரமாவது ஹெக்டர் எஸ்யூவி கார் குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் அமைந்துள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்குதான் ஆரம்பம் முதலே எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிகளை உற்பத்தி செய்து வருகிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடந்திருப்பதில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது.

ஆம், ஐம்பதாயிரமாவது ஹெக்டர் எஸ்யூவியை முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே அடங்கிய குழு தயாரித்துள்ளது. வெல்டிங், பெயிண்டிங் என அனைத்து வேலைகளையும் பெண்களே செய்துள்ளனர். மேலும் உற்பத்தி பிரிவில் இருந்து எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வெளிவந்த பிறகு, அதன் சோதனை ஓட்டங்களையும் பெண்களே நடத்தியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு துறைகளில் தற்போது ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இதில், வாகன உற்பத்தியும் ஒன்று. ஆனால் ஐம்பதாயிரமாவது ஹெக்டர் எஸ்யூவியை முழுக்க முழுக்க பெண்கள் மூலமே எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாரித்திருப்பது பாராட்டுக்குரிய ஒரு விஷயம். ஆட்டோமொபைல் துறையில் நுழைய விரும்பும் பெண்களுக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், 12.89 லட்ச ரூபாய் முதல் 18.42 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளிலும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கிடைக்கிறது. மைல்டு-ஹைப்ரிட் தேர்வும் வழங்கப்படுகிறது.

அத்துடன் ஹெக்டர் எஸ்யூவி காரில், மேனுவல், சிவிடி மற்றும் டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் தற்போது டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது. விற்பனையில் போட்டியாளர்களுக்கு சவாலாக திகழ்கிறது.
எம்ஜி நிறுவனம் தற்போதைய நிலையில் ஹெக்டர் எஸ்யூவி மட்டுமின்றி, ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்ட்டர் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த அனைத்து கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.