MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த காரிலும் இடம் பெறாத அம்சங்களுடன்! காரா இல்ல ரோபோவா!

MG Motor Astor மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இக்காரில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் ஆஸ்டர் (Astor) காரும் ஒன்று. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். இக்காரையே நிறுவனம் தற்போது இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இக்கார் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இரு விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வுகளில் அது கிடைக்கும். 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் எம்ஜி ஆஸ்டர் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இதில், 1.3 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினானது அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த மோட்டாரில் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இதன் 1.3 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 161 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த மோட்டாரில் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படும் என எம்ஜி தெரிவித்திருக்கின்றது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மிக அதிக திறனை வெளியேற்றுவதால் மிக பவர்ஃபுல் வெர்ஷனாக எம்ஜி ஆஸ்டர் டர்போ வேரியண்ட் காட்சியளிக்கின்றது. தற்போது இந்தியாவில் மிகவும் பவர்ஃபுல் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராக நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகிய கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இவையிரண்டிலும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 156 பிஎஸ் பவரையும், 254 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இவற்றிற்கு இணையான திறன் வெளிப்பாட்டு வதியுடனே எம்ஜி ஆஸ்டர் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இந்த விஷயத்தில் மட்டுமில்லைங்க இன்னும் பல விஷயங்களில் எம்ஜி ஆஸ்டர் மிக சிறப்பு வாய்ந்த தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. எம்ஜி ஆஸ்டர் காரில் அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்ட் டிரைவர் எய்ட்ஸ் சிஸ்டம் (Advanced Driver Aids System) வழங்கப்பட்டுள்ளது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வேர்ட் கொல்லிசன் எச்சரிக்கை, லேன் டிபார்ட்சர் பிரவென்ஷன், லேன் டிபார்ட்சர் எச்சரிக்கை, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அடாஸ் வழங்கும்.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இத்துடன், பின்பக்க டிரைவ் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் இன்டெலிஜன்ட் ஹெட்லேம்ப் கன்ட்ரோல் வசதி உள்ளிட்டவையும் எம்ஜி ஆஸ்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடன் மற்றும் ஒரு மிக முக்கிய அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட பெர்சனல் அசிஸ்டண்ட் (AI Personal Assistant) வழங்கப்பட்டுள்ளது. இது தன்னாட்சி லெவல் 2 தொழில்நுட்பத்தைக் கொண்டது. இது பல்வேறு வசதிகளை பயனரின் குரல் கட்டளையின் அடிப்படையில் வழங்கும். பாடல் இசைக்க அல்லது மாற்ற, காரின் செட்டிங்க்ஸை மாற்ற, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வின்டோக்களை திறப்பது அல்லது மூடுவது உள்ளிட்ட வசதிகளை செய்துக் கொள்ள முடியும்.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இதுமட்டுமின்றி, அளவில்லா கடி ஜோக், செய்தி, விக்கிபீடியா, வழி காட்டுதல், சேட்டிங் வசதி போன்ற வசதிகளையும் இந்த பெர்சனல் அசிஸ்டண்ட் அதன் பயனருக்கு வழங்கும். ஒரு உதவியாளர் இருந்தால் கூட இதுபோன்ற அம்சங்களை நமக்கு வழங்க முடியாது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

அத்தகைய அம்சங்களை எம்ஜி ஆஸ்டரில் இடம் பெற்றிருக்கும் செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெர்சனல் அசிஸ்டண்ட் வழங்க இருக்கின்றது. மேலும், 14 தன்னாட்சி அம்சங்கள் எம்ஜி ஆஸ்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வசதிக்காக ஜியோ, பார்க் ப்ளஸ் மற்றும் மேப்மைஇந்தியா ஆகிய நிறுவனங்களுடன் நிறுவனம் கூட்டணி வைத்திருக்கின்றது. இ-சிம் வசதிக்காகவே நிறுவனம் ஜியோ உடன் கூட்டணி வைத்திருக்கின்றது.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

எம்ஜி ஆஸ்டர் காரில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களின் பட்டியல் இங்கே:

1. 80-க்கும் மேற்பட்ட இணைய வழி அடிப்படையிலான அம்சங்கள்.

2. கண் வடிவிலான எல்இடி மின் விளக்குகள், 17 இன்ச் இரு வண்ண அலாய் வீல்கள்.

3. 6 வழி பவர் இருக்கை

4. நார்மல், அர்பன் மற்றும் டைனமிக் ஆகிய அட்ஜெஸ்ட்மென்ட் வசதியுடன் ஸ்டியரிங் வீல்

5. 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

6. 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர்

8. பனோரமிக் சன்ரூஃப்

9. பிஎம் 2.5 ஃபில்டர்

10. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்

11. சூடான ORVM

12. ப்ளூடூத் வசதி கொண்ட டிஜிட்டல் சாவி

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

பாதுகாப்பு அம்சங்கள்:

எம்ஜி ஆஸ்டர் காரில் 27 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 6 ஏர்-பேக்குகள், தன்னாட்சி லெவல் தொழில்நுட்பம் கொண்ட லேன் கீப் அசிஸ்ட், தானியங்கி பிரேக்கிங், இன்டெலிஜன்ட் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

MG Motor Astor எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு! இதுவரை எந்த ஒரு காரில் இடம் பெறாத அம்சங்களுடன்... காரா இல்ல ரோபாவா!

இதுமாதிரியான சிறப்பம்சங்கள் கொண்ட எம்ஜி ஆஸ்டர் காரே இன்று (செப்டம்பர் 15) இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. இது Hyundai Creta (ஹூண்டாய் க்ரெட்டா), Kia Seltos (கியா செல்டோஸ்), Skoda Kushaq (ஸ்கோடா குஷாக்) மற்றும் Volkswagen Tiguan (ஃபோக்ஸ்வேகன் டைகுவான்) ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்ததியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது.

Most Read Articles
English summary
Mg motor finally revealed astor midsize suv in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X