புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் தனது கார்களின் விலையை பல மடங்கு உயர்த்தி அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் பிற சில காரணங்களால் விலையை உயர்த்தி வருவதாக வாகன உற்பத்தியாளர்கள் இதற்கு காரணமாக கூறி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வழங்கி வரும் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

இது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனமே விலை உயர்வு பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. நிறுவனம் ரூ. 50 ஆயிரம் வரை தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தி இருக்கின்றது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

நிறுவனம் தற்போது ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் குளோஸ்டர் ஆகிய எஸ்யூவி கார் மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றின் விலைகளையே எம்ஜி தற்போது அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. ஏற்கனவே இந்த ஆண்டில் மூன்று முறை கார்களின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக மீண்டும் கார்களின் விலையை எம்ஜி உயர்த்தியுள்ளது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவ்வி ஆகியவையே அவை ஆகும். இவற்றில் சூப்பர் ட்ரிம்மை தவிர பிற அனைத்து ட்ரிம்களின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. சீரான விலை உயர்வாக அனைத்து ட்ரிம்களுக்கு ரூ. 40 ஆயிரம் என்ற விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. எம்ஜி குளோஸ்டர் ரூ. 29.98 லட்சம் தொடங்கி ரூ. 37.68 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

இதேபோல் நிறுவனத்தின் மற்றுமொரு பிரபல கார் மாடலான ஹெக்டர் எஸ்யூவியின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதன் விலையில் ரூ. 8 ஆயிரம் தொடங்கி ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரட்டை நிற தேர்வான ஷார்பின் விலையே ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் ப்ளஸ் மாடலில் இரு வேரியண்டுகளை விற்பனையில் நீக்கி இருக்கின்றது. இதை நீக்கிய கையோடு தற்போது விற்பனையில் இருக்கும் வேரியண்டுகளின் விலையை நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் இரட்டை நிற அலங்கரிப்பைக் கொண்ட ஷார்ப் வேரியண்டிற்கு ரூ. 42 ஆயிரம் விலை உயர்வையும், ஒற்றை நிற தேர்விலான ஷார்ப்பிற்கு ரூ. 15 ஆயிரம் விலை உயர்வையும் நிறுவனம் செய்துள்ளது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான எஞ்ஜின்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 168 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

இதன் டீசல் எஞ்ஜின் 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல், சிவிடி, டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால், இதனை இரு விதமான ட்யூன்-அப்பில் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

அதில் ஒன்று 161 பிஎச்பி மற்றும் 375 என்எம் டார்க்கையும், மற்றொன்று, 215 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றன. இத்துடன், 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ் மிஷன் இரட்டை வீல் மற்றும் நான்கு வீல் இயக்கம் ஆகிய வசதிகளும் எம்ஜி குளோஸ்டருக்கு வழங்கப்படுகின்றது.

புது கார் வாங்குறது ரொம்ப கஷ்டமாய்டும் போலிருக்கே... திடீரென பல மடங்கு விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

எம்ஜி நிறுவனம் விரைவில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் குளோஸ்டர் ஆகிய கார்களின் வரிசையில் அஸ்டர் எஸ்யூவி காரையும் இணைக்க இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கு இந்தியாவில் புக்கிங்குகள் தொடங்கிவிட்டன. மிக விரைவில் டெலிவரி பணிகள் தொடங்க இருக்கின்றன. இக்காருக்கான புக்கிங் தொடங்கப்பட்ட 20 நிமிடங்களில் 5 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Mg motor hikes hector hector plus and gloster prices upto rs 50000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X