எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாதத்திற்கான மாடல் வாரியான சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது? என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்பு என்ற பெருமையை ஹெக்டர் பெற்றுள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும்.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் 3,426 ஹெக்டர் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 1,210 ஆக சரிந்துள்ளது. இது 65 சதவீத வீழ்ச்சியாகும். இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி மோட்டார் நிறுவன தயாரிப்புகளின் பட்டியலில் ஹெக்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

இந்த பட்டியலில் அஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்தான். எம்ஜி அஸ்டர் எஸ்யூவி வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பாண்டு நவம்பர் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 1,018 அஸ்டர் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி நடப்பாண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் என்பதால், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 110 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 151 ஆக உயர்ந்துள்ளது. இது 37 சதவீத வளர்ச்சியாகும். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை முன்கூட்டியே புரிந்து கொண்ட எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஒரே ஒரு நேரடி போட்டியாளராக திகழ்கிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டி இல்லை. ஏனெனில் அது சற்று விலை குறைவான மாடலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தன்வசம் வைத்துள்ளது. இதனை தகர்க்க எம்ஜி மோட்டார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை குறைவான வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

இந்த பட்டியலில் நான்காவது மற்றும் கடைசி இடத்தை எம்ஜி க்ளோஸ்ட்டர் பிடித்துள்ளது. இது ஃபுல் சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் போட்டியிட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் ஃபோர்டு எண்டேவியர் போட்டியில் இருந்து விலகி கொண்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய வெளியேற்றமே இதற்கு காரணம். எனவே போட்டி குறைந்துள்ளதால் வரும் காலங்களில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 627 க்ளோஸ்ட்டர் கார்களை விற்பனை செய்திருந்தது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 102 ஆக சரிந்துள்ளது. இது 83.73 சதவீத வீழ்ச்சியாகும். இது மிகப்பெரிய சரிவு என்பதில் சந்தேகமில்லை. இந்த சரிவிற்கு செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா உள்பட சர்வதேச அளவில் செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரம்... நவம்பர் மாதம் முதலிடத்தை பிடித்த கார் எது?

இதன் காரணமாக கார்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் விளைவாக கார்களின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் அதிநவீன வசதிகள் நிரம்பிய கார் என்பதால், செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் இதன் விற்பனை சரிவை சந்தித்திருக்கலாம். வரும் காலங்களில் இதன் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

Most Read Articles
English summary
Mg motor india model wise november 2021 sales hector leads chart
Story first published: Thursday, December 16, 2021, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X