புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

எம்ஜி நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் அசத்தலாக இருப்பதுடன், விலையும் மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

இந்த நிலையில், புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, செமி கன்டக்டர்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால், எம்ஜி கார்களின் உற்பத்தி பாதிக்ப்பட்டு இருப்பதாக டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

மேலும், தற்போதைய நிலவரப்படி, எம்ஜி கார்களுக்கான காத்திருப்பு காலம் 2 முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, டெலிவிரி கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

எனவே, ஓரிரு மாதங்கள் வரை புதிய எம்ஜி கார்களின் காத்திருப்பு காலம் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பான கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள விரும்பினால், அருகில் உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

குறித்த காலத்தில் டெலிவிரி கிடைக்குமா அல்லது தாமதம் ஏற்படுமா என்பது குறித்து டீலர் மூலமாக முழுமையாக விபரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்ட்டர் மற்றும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. செமி கன்டக்டர் சப்ளை பிரச்னை காரணமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எம்ஜி கார்களும், முக்கிய உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு அசெம்பிள் மாடல்களின் உற்பத்தியிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

எம்ஜி மோட்டார் நிறுவனம் மட்டுமின்றி, ஃபோர்டு உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களின் கார் உற்பத்திப் பணிகளும் செமி கன்டக்டர் தட்டுப்பாடு காரணமாக, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போது நிலைமை சரியாகும் என்று தெரியாத நிலை உள்ளது. எனவே, புதிய கார் புக்கிங் செய்திருப்பவர்கள் ஒருமுறை டீலரை தொடர்பு கொண்டு டெலிவிரி காலம் குறித்து தெரிந்து கொள்வது சிறந்ததாக அமையும்.

Most Read Articles

English summary
According to report, MG Motor car production has affected in India due to semiconductor shortage.
Story first published: Monday, March 22, 2021, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X